Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Wednesday, 13 March 2024

இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட்

 *இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி”  திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது*!! 






மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் S. A.விஜயகுமார்  இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் “அரிசி”.  இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு,  தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது. 


நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட், நம் பாரம்பரியத்தை, நாம் அறியாமலே அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஒரு அழுத்தமான திரைக்கதையுடன், ஆழமான படைப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் S.A.விஜயகுமார். 


இப்படத்தின் கதையை கேட்டு அசந்துபோன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முதன்முறையாக திரையில் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இக்கால சூழலுக்கு எற்ப நடிகர் சமுத்திரக்கனி- யின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படும்..


இப்படத்தின் படப்பிடிப்பு, விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 


இவர்களுடன் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 


இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் குரோசோவா எடிட்டிங் செய்கிறார். நடனம் தினா மாஸ்டர், சண்டை பயிற்சி வீர் விஜய், சேது ரமேஷ் கலை இயக்கம் செய்துள்ளார்,டிசைன்ஸ் அஞ்சலை முருகன்,

மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் P சண்முகம் தயாரிக்க, S. M.பிரபாகரன் மற்றும் மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி, பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

No comments:

Post a Comment