Featured post

WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN

 *WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN AND HONOURABLE DEPUTY CHIEF MINISTER THIR...

Thursday, 28 March 2024

வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா

 “வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டனர்  !! 



எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்பட  டிரெய்லர் !!


Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில்  க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர். 


முன்னதாக வெளியான டீசர் படத்தின் களத்தை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக அமைந்துள்ளது. 


5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.


இந்த டிரெய்லர்  5 கதாபாத்திரங்களின் பின்னணியை காட்டுவதுடன், பணத்திற்காக அவர்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தை பரபரப்பாகக் காட்டுகிறது. படபடக்கும் எடிட்டிங்  கட் , கதாபாத்திரங்களின் தவிப்பு, சிந்தனையைத் தூண்டும் வசனங்கள் என டிரெய்லர், இப்படம் மிக வித்தியாசமான களத்தில் ஒரு அருமையான திரை அனுபவம் தரும் என்பதை உறுதி செய்கிறது. 


பணம் தான் உலகின் மனித வாழ்வை தீர்மானிக்கிறது. பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் நடக்கும் போராட்த்தை பரபர திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம்.


இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


Focus Studios சார்பில் விநாயக் துரை இப்படத்தைத் தயாரித்துள்ளதுடன், இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். 


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில்,  பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 


தொழில் நுட்ப குழு 

தயாரிப்பு நிறுவனம் : Focus Studios தயாரிப்பாளர்: விநாயக் துரை 

இயக்குநர்: விநாயக் துரை 

ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து 

இசை: சகிஷ்னா சேவியர் 

எடிட்டர்: அஜய் 

சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ 

மக்கள் தொடர்பு : சதீஷ்-சிவா (AIM)

 https://youtu.be/KjXFrKTH34I

#vallavanvaguthathada 

#focusStudiosproduction

No comments:

Post a Comment