Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Saturday, 23 March 2024

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட

 *நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது!*





மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. 


மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுள்ளது. இந்த பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.


நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது. டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 


சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் ‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் எடிட்டராக பணியாற்றினார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.


சவுண்ட் அண்ட் விஷன் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் விஷ்ணு ரெக்கார்டிங் இன்ஜினியர். அனு வர்தன் மற்றும் தட்ஷா பிள்ளை ஆகியோர் ராஜனுடன் இணைந்து ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். செரினாவும் குப்புசாமியும் ஒப்பனையை கவனித்திருக்க, ரஞ்சித் அம்பாடி சிறப்பு ஒப்பனையை கையாண்டுள்ளார். ஷோபி மற்றும் பிரேம் ரக்ஷித் படத்திற்கு நடன இயக்குநர்கள்.


இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸின் வம்சி-பிரமோத் தயாரித்திருக்க நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment