Featured post

Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town

 *Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town* Passi...

Sunday, 20 October 2024

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில்

 *ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் 'சொர்க்கவாசல்'*





*சிறையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், சானியா அய்யப்பன், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்*


ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக 'சொர்க்கவாசல்' உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். 


இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். 


சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப் படம், சிறைச் சுவர்களுக்கு உள்ளே இருப்பவர்களின் கடுமையான வாழ்வியல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார். 


‘சொர்க்கவாசல்' திரைப்படத்திற்காக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறி, கடின உழைப்பை ஆர் ஜே பாலாஜி வழங்கியுள்ளார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பங்களிப்போடு அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக 'சொர்க்கவாசல்' உருவாகியுள்ளது என்று இயக்குநர் மேலும் கூறினார். 


இப்படத்தின் கதையை தமிழ்ப்பிரபா மற்றும் அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் எழுதியுள்ளார். மம்முட்டி நடித்து பெரும் வெற்றி பெற்ற 'பிரம்மயுகம்' படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை பிரின்ஸ் ஆண்டர்சன் கவனிக்க, செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம்: எஸ் ஜெயச்சந்திரன், சண்டை பயிற்சி: தினேஷ் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு: ஸ்ருதி மஞ்சரி, உடைகள் தலைமை: அனந்தா நாகு, ஒப்பனை: சபரி கிரீசன், ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் எஸ் அழகியக்கூத்தன், ஒலிப்பதிவு: வினய் ஶ்ரீதர், வி எஃப் எக்ஸ்: லார்வென் ஸ்டுடியோஸ், டிஐ: பிக்ஸெல் லைட் ஸ்டூடியோஸ், காஸ்டிங் இயக்குநர்: வர்ஷா வரதராஜன், பப்ளிசிட்டி வடிவமைப்பு: கபிலன் செல்லையா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன், ப்ரோமோஷன்ஸ்: ஏகேடி, ஆடிட்: ஃபினாங்கி கன்சல்டிங், லீகல்: டி எஸ் லீகல், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: பி எஸ் ராஜேந்திரன்,  நிர்வாக தயாரிப்பு: விக்ரம் வைபவ் ஆர் எஸ், தயாரிப்பு ஆலோசனை:  ஏ கே அனிருத், கிரியேட்டிவ் ஆலோசனை: கிருஷ்ணா மாரிமுத்து. 


ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் 'சொர்க்கவாசல்'. இதன்  படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 


***

No comments:

Post a Comment