Featured post

Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட

 *Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!* Dawn Pictures தயாரிப்பு நிறுவ...

Wednesday, 16 October 2024

Vettaiyan Movie Review

Vettaiyan Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் எதிர்பாத்த படம் இன்னிக்கு  வெற்றிகரமா theatre ல ஓடிட்டு இருக்கற ரஜினி ஓட 170 படம் வேட்டையன் தான் பாக்க போறோம். இந்த படத்தை jaibheem டைரக்டர் TJ ஞானவேல் தான் direct பண்ணிருக்காரு. இதுக்கு அனிருத் இசைஅமைச்சிருக்காரு. இந்த படத்துல  Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Ritika Singh, Dushara Vijayan, Rohini, Rao Ramesh, Abhirami and Ramesh Thilak. னு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு னு தான் சொல்லணும். இந்த படத்தோட interesting ஆனா விஷயங்களை ஏற்கனவே நாங்க போட்ருக்கோம். அந்த வீடியோ வ நீங்க இன்னும் பாக்கலானே கண்டிப்பா போய் பாருங்க. சோ வேட்டையன் படம் எப்படி இருக்குனு பாப்போம் வாங்க. 

Vettaiyan Movie Review 

https://youtu.be/E4j2C1uO_1A?si=eW1msFF2Xrcwy_CN

இந்த படத்தோட கதை என்னன்னு பாப்போம். ஜெயிலர் படைத்து போலவே இந்த படத்லயும் ரஜினி ஒரு போலீஸ் officer அ இருக்காரு. இவருக்கு நியாயம் தான் முக்கியம் அதுனால சட்டத்தை தன்னோட கைல எடுக்கற ஒரு போலீஸ் அ இருக்காரு. அதே சமயம் அமிதாப் பச்சன் ஒரு சீனியர் lawyer அப்புறம் human rights சாம்பியன் அ இருக்காரு. இவரை பொறுத்த வரையும் சட்டம் தான் எல்லாமே அதுக்கு மரியாதை குடுக்கறவரை இருக்காரு. இந்த மாதிரி இவங்க ரெண்டு பேருக்கும் நேர்மாறான கருத்துகள் இருக்கு. நம்ம ட்ரைலர் லேயே பாத்திருப்போம் SP Athiyan அ வர ரஜினி அ encounter specialist னு அறிமுகம் பண்ணுவாங்க. இவரு அந்த மாதிரி நெறய ரவுடி காலா encounter னால போட்டு தள்ளிருப்பாரு.  dushara vijayan ஒரு government school teacher அ இருப்பாங்க. இவங்கள தான் ஒருத்தன் rape பண்ணி கொலை பண்ணிடுவான். இந்த incident னால மக்கள் கொந்தளிச்சு மீடியா ஓட pressure ஒரு பக்கம், போலீஸ் higher officials ஓட பிரஷர் ஒரு பக்கம் னு ரஜினி ஒரு ஆல encounter பண்ணிடுவாரு. கடைசில தான் அமிதாப் மூலமா தெரியவரும் தான் சுட்டது ஒரு அப்பாவியா . இதுக்கு அப்புறம் என்ன ஆகுது? இந்த கொலை எப்படி ஒரு பெரிய corporate அ நடத்துற ராணா கிட்ட connect ஆகுது? ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.

first half ல   முதல் 30 நிமிஷம் ரஜினி fans க்கு treat தான் ஏன்னா கைதட்டற moments நெறய இருக்கு. கதை எங்கயும் சிதறம செம speed அ ரொம்ப விறுவிறுப்பா எடுத்திருக்காரு ஞானவேல்.  இன்டெர்வல் க்கு அப்புறம் என்ன மாதிரி போகும் ன்றதே ரொம்ப ஆர்வமா இருக்குனு தான் சொல்லணும். second half ல ஒரு சாதாரண மனுஷன் படுற கஷ்டம் அப்புறம் முக்கியமான கதை ஏ இங்க தான் வருது.  கடைசியா வர ரஜினி ராணா ஓட meeting தான் செமயா இருக்கு. இந்த படத்தோட எல்லா சண்டை கட்சிகளும் விசில் பறக்கிற அளவுக்கு சூப்பர் அ cherograph பண்ணிருக்காங்க. இந்த எல்லா scenes யும் நமக்கு impact ஆகுறதுக்கு anirudh ஓட music யும் ஒரு காரணம்.  


அனிருத் ஓட background score னு பாக்கும் போது அவரோட songs எல்லாமே செமயா இருக்கு. குறிப்ப hunter title track தான் peak ல இருக்கு. அப்படியே அந்த ரஜினி effect அ குடுக்கற ஒரு best song அ இருக்குனு தான் சொல்லணும். 

ரஜினிகாந்த் எப்பவும் போல இந்த படத்தை தூக்கி பிடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். patrick அ வர fahad fasil ஒரு smart ஆனா திருடன் அ இருக்காரு. இவரோட காமெடி portions யும் ரசிக்க வைக்கிற மாதிரி அமைச்சிருக்கு. இவரை ரஜினி தான்  technology க்காக help க்கு வச்சிருப்பாரு. மஞ்சு warrier ரைஜினி ஓட மனைவியா ஒரு youtube channel அ வச்சு நடித்திடு இருப்பாங்க. ஆனாலும் இவங்களோட performance செமயா இருக்குனு தான் சொல்லணும். படத்தோட கடைசில இவங்களுக்கு ஒரு mass ஆனா scene ஒன்னும் வரும் அதுவும் செமயா இருக்கும். ராணா asusual ஒரு வில்லன் அ செமயா வந்துட்டு போய்ட்டாரு. இவரோட ஒரே குறிக்கோளை கல்வி யா வச்சு காசு பாக்கிறது தான்.  Dushare vijayan தான் மெயின் ஆனா கேரக்டர் அ இருக்காங்க இவங்கள சுத்தி தான் கதையே நகுறது. ரஜினி,  காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் ன்ற மாதிரி தான் இருப்பாரு அப்படியே மறுபக்கம் Judge satyadev அ வர அமிதாப் பச்சான்  அ பாத்தீங்கன்னா அவரசப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி ன்ற மாதிரி ரெண்டு பேரும் வேற ஒரு கண்ணோட்டத்துல பாக்கற இவங்க,  மோதிக்கிறது highlight அ இருக்கு.    இன்னும் சொல்லப்போனா அமிதாப் பச்சான் யும் ரஜினி ஓட காம்போ வும் செமயா suit ஆயிருக்கு.


இந்த படத்துல கிட்ட தட்ட jaibheem சொல்ற சோசியல் message இதுலயும் இருக்குனு தான் சொல்லணும். எப்படி போலீஸ் ஓட encounters முறை தவருது, எப்படி மீடியா ல தப்பான news யும், morph ஆனா videos வந்து மக்கள் கிட்ட தப்ப ஆனா நபர் அ கெட்டவன் னு சித்திரிக்குது னு அழகா காமிச்சிருக்காரு. அது மட்டும் கிடையாது, போலீஸ் விசாரணை னு வரும் போது பாகுபாடு பாக்காம இருக்கிறதா விட்டுட்டு அங்கேயும் ஏழை பணக்கரா வித்யாசத்தை பாத்து விசாரணை பண்ணறீங்க ன்றதும் இதுல காமிச்சிருக்காங்க. அதே மாதிரி பணக்காரங்க னால நம்ம கல்வி எப்படி மோசமா போய்ட்டுருக்குனும், இதுனால ஏழை அப்புறம் மிடில் class குடும்பத்துல இருந்து வர பசங்களோட வாழக்கை எப்படி கேள்விக்குரிய நிக்குது ன்றது தான் இந்த படத்தோட மெயின் விஷயங்களை இருக்கு.  


நம்ம இப்போ வாழற இந்த உலகத்துல நம்மக்கு எல்லாமே instant அ ஒரு விஷயம் கிடைக்கணும் அப்போ தான் நமக்கு திருப்தியா இருக்கும். அந்த மாதிரி தான் இந்த படத்துல instant அ தப்ப பண்ண உடனே சுட்டு கொள்ளணும் ன்றது விட நம்ம கொஞ்சம் சட்டது மேல நம்பிக்கை வைச்சு கொஞ்சம் பொறுமையா இருந்த எல்லாமே கரெக்ட் அ sort out ஆயிடும் நும் தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க.      

மொத்தத்துல ஒரு நல்ல investigative thriller social drama படம் கண்டிப்பா miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment