Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Tuesday, 15 October 2024

பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி

 *பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!*



வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன.


சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திரையிடப்படுகிறது


மும்பை, இந்தியா—அக்டோபர் 15, 2024- மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான ​​சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை இந்தியாவில் முன்னிலையில் உள்ள பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, இன்று வெளியிட்டது. சிட்டாடல் பிரிவில் வெளிவரும் இந்த இந்தியத் தொடரை ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) இயக்கியுள்ளனர் மற்றும் ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர். மேனன் இதனை எழுதியுள்ளார். இந்தத் தொடரை டி2ஆர் ஃபிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ, ஏஜிபிஓவைச் சேர்ந்த ஆண்டனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ, ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட் மற்றும் ஸ்காட் நேம்ஸ், டேவிட் வெயில் (ஹண்டர்ஸ்) உடன் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக இணைந்து சிட்டாடல்: ஹனி பன்னி-ஐ தயாரித்துள்ளனர் மற்றும் இவர்கள் சிட்டாடல் பிரிவின் அனைத்துத் தொடர்களையும் உருவாக்குகிறார்கள். மிட்நைட் ரேடியோவும் ஒரு  நிர்வாக தயாரிப்பாளராகும். இத் தொடரில் திறமை வாய்ந்த வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாகவும், பல்துறை வல்லுநர் கே கே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் மற்றும் காஷ்வி மஜ்முந்தர் ஆகியோரை இணை நடிகர்களாகவும் நடித்திருக்கும் இந்த சிட்டாடல்: ஹனி பன்னி... பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 7ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.


90களின் துடிப்பான ஒரு திரைக்கதை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள உற்சாகமூட்டும் மற்றும் ஆவலைத் தூண்டும் இந்த ஸ்பை த்ரில்லரின் முன்னோட்டமாக இந்த டிரைலர் வெளி வந்துள்ளது, இதில் அதிரடி  ஆக்‌ஷன், ஹை-ஆக்டேன் ஸ்டண்ட் மற்றும் இருக்கை நுனிக்கு நம்மை அழைத்துச் செல்லும் உற்சாகம் ஆகியவை நிறைந்துள்ளன. 


ஸ்டண்ட்மேன் பன்னி (வருண் தவான்) வாய்ப்புகளைத் தேடும் நடிகை ஹனியை (சமந்தா) துணை நடிகராக நியமிக்கிறார். ​அவர்கள் அதிரடி, உளவு மற்றும் துரோகம் ஆகியவற்றின் இடர் நிறைந்த உலகத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது ஆபத்தான கடந்த காலத்தை அலசும் போது, ​மனமொடிந்து ​பிரிந்த ஹனியும் பன்னியும் மீண்டும் ஒன்றிணைந்து தங்கள் இளம் மகள் நதியாவைப் பாதுகாக்க போராடுகிறார்கள்.


“டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்குப் பின், நிகழ்ச்சியின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வருண், சமந்தா மற்றும் ராஜ் & டிகே ஆகியோருடன் அவர்களது ரசிகர்களும் நவம்பர் 7ஆம் தேதியை ஆவலுடன்  எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் மனம் கவரும் வகையிலான சிட்டாடல்: ஹனி பன்னியின் வியக்கத்தக்க உலகத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட இதுவே சிறந்த நேரம் என நாங்கள் கருதினோம். ராஜ் & டிகே இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை த்ரில்லரில் எப்போதும் போலவே தங்கள் திறமையையும், அனைவரையும் கவரும் ஆற்றலையும் வெளிப்படுத்தி உள்ளனர், இது எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய த்ரில்லிங் நிறைந்த பயணமாக இருக்கும்,” என்று இந்தியாவின் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறினார்.


ராஜ் மற்றும் டி.கே கூறுகையில் "சிட்டாடல்: ஹனி பன்னி எங்களுக்கு ஒரு முக்கியமான பிராஜக்ட் ஆகும், இது இதுவரை முயலாத உளவாளிகள் மற்றும் உளவு பார்க்கும் உலகில் பயணிக்க எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது, நாங்கள் பல பிராஜக்ட்களைச் செய்திருந்தாலும், சிட்டாடல்: ஹனி பன்னி எங்கள் முதல் கூட்டுப்பணியாகும். இது ருஸ்ஸோ பிரதர்ஸ் போன்ற படைப்பாற்றல் சக்திகளுடனும், உலகெங்கிலும் உள்ள திறமையான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடனும் இன்னைந்து செயலாற்றும் அற்புதமான மதிப்புமிக்க படைப்பு அனுபவமாக அமைந்தது.” என்றனர்.


"பன்னி நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் போலன்றி வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒரு உளவாளியாக, பன்னி.. இரட்டை வாழ்க்கை நடத்துவது மட்டுமல்லாமல், அவரது ஆளுமையின் ஒவ்வொரு அம்சமும் இரண்டு தனித்துவமான பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒரு நடிகராக இது எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. நுணுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள இக்கதை களத்திற்கு  ஏற்ப நான் உருவகப்படுத்திய அனுபவங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் கலவையைப் புனைந்து அதே சமயம் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தயாராக வேண்டிய சூழல். இது எனது மிகவும் சவாலான நடிப்புகளில் ஒன்றாகும். மேலும் பன்னியை உயிர்ப்பிக்க வாய்ப்பளித்த பிரைம் வீடியோ, ராஜ் & டிகே மற்றும் ஏஜிபிஓ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வருண் தவான் கூறினார்.


சமந்தா கூறுகையில், "மனங்கவரும் கதைக்களம், செழுமையான கதாபாத்திர ஆழம் மற்றும் சர்வதேச தரத்திற்கு போட்டியாக விளங்கும் சண்டைக்காட்சிகளுடன் ஒரு ஆக்‌ஷன் நிரம்பிய பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பும், இதில் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. இதிலுள்ள உளவு கதைகளின் தொகுப்பு, இந்த பிராஜெக்ட்டிற்குள் என்னை ஈர்த்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும். பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்கள் இந்தத் தொடரை முழுமையாக ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றார்.


https://www.youtube.com/watch?v=ZQuuw18Yicw

No comments:

Post a Comment