Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Tuesday, 22 October 2024

இரவினில் ஆட்டம் காட்டும் நிழல் உலக நாயகன் !

 இரவினில் ஆட்டம் காட்டும் நிழல் உலக நாயகன் !








நவம்பர் 8 முதல் உலகமெங்கும் 'இரவினில் ஆட்டம் பார் '


'இரவினில் ஆட்டம் பார் ' ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் !


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற 'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ' என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும்.


அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் 'இரவினில் ஆட்டம் பார் 'என்கிற பெயரில் ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம்.அந்தக் காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது.


இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியுள்ளார் ஏ. தமிழ்ச்செல்வன்.


இப்படத்தின் கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகன் நிலையில் மாரா  ராஜேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக கிரேசி வருகிறார். இவர் சன் டிவியில் வரும் மல்லி, திருமகள் தொடர்களில் நாயகியாக நடித்து வருபவர். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.


இப்படத்திற்கு ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார் பாடல்கள் -செல்வராஜா . சண்டைக் காட்சிகளுக்கு எஸ். ஆர். ஹரிமுருகனும் நடனத்திற்கு ஸ்டைல் பாலாவும் பொறுப்பேற்றுள்ளனர்.படத்தொகுப்பு எஸ் ஆர் முத்து கொடாப்பா.


சேலம் ஏற்காடு பகுதியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்துள்ளார்கள்.ஏற்கெனவே படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி பிரபலமாகி படத்திற்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. இப்படத்தில் இடம்பெற்ற 'கருங்கூந்தல் அழகுக்காரி 'பாடல் சமூக ஊடகங்களில்  பிரபலமாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


தீபாவளிப் பண்டிகை தாண்டி நவம்பர் எட்டாம் தேதி 'இரவினில் ஆட்டம் பார் ' திரைப்படம் வெளியாகத் தயாராக உள்ளது.

No comments:

Post a Comment