*பராசக்தி: சிவாஜி கணேசன் நடிப்பில் புரட்சிகரமான கதைக்களம் மற்றும் பின்புலம்*
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சிவாஜி கணேசன் நடிச்ச பராசக்தி படத்தை பத்தி தான் பாக்க போறோம். இந்த படத்தை கிருஷ்ணனும் பஞ்சும் தான் இயக்கி இருக்காங்க. இந்த படத்துக்கு வசனம் எல்லாம் கலைஞர் கருணாநிதி தான் எழுதிருக்காரு. Sivaji Ganesan - Gunasekaran ஆவும் , S. V. Sahasranamam - Chandrasekaran ஆவும் , S. S. Rajendran - Gnanasekaran ஆவும் Sriranjani - Kalyani ஆவும் Pandari Bai - Vimala ஆவும் நடிச்சரிப்பாங்க . இவங்க தான் இந்த படத்துக்கு முக்கியமான characters . இந்த படத்தோட ஸ்வாரசியமான விஷயங்களையும், படத்தோட கதையும் பாப்போம் வாங்க.
பராசக்தி 1952-ஆம் ஆண்டு தீபாவளி அன்னிக்கு , அக்டோபர் 17-ஆம் தேதி வந்தது. இந்த படம் தான் சிவாஜி கணேசனுக்கும் ராஜேந்திரனுக்கும் முதல் படமும் கூட. பாவலர் பாலசுந்தரம் எழுதுன பராசக்தி நாடகத்தை ஓட கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் இந்த படம், இந்த படத்தோட கதையை ஒரே வரில சொல்லணும் ந இரண்டாம் உலகப் போர் நடந்துட்டு இருக்கும்போது ஒரு தமிழ் குடும்பத்துக்கு ஏற்படுற கஷ்டங்கள் தான் இந்த படம்.
பாவலர் பாலசுந்தரம் எழுதிய பராசக்தியும் T S நடராஜன் எழுதிய என் தங்கையும் சேர்த்து ஒரே படமா பண்ணனும் னு முடிவு பண்ணிச்சு coimbatore ல இருக்கற Central ஸ்டுடியோஸ். ஆனா இதுக்கு T S நடராஜன் ஒதுக்கதுனால இந்த நிறுவனம் அப்படியே விட்டுருச்சு. இதுக்கு முன்னாடி சிவாஜி ஒரு நாடக நடிகர் அ இருந்த சமயம், என் தங்கை ன்ற நாடகத்துல தான் அன்னான் வேஷம் எடுத்து நடிச்சிருந்தாரு. அதுக்கு அப்புறமா பராசக்தி அ படமா எடுக்கிறதுக்கு க்கான உரிமையை நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பி. ஏ. பெருமாள், ஏ. வி. மெய்யப்பன் ஓட support ல வாங்கினாரூ . இந்த படத்துக்கு இசை அமைச்சர் ஆர். சுதர்சனம், ஒளிப்பதிவு எஸ். மருதிராவ், அப்புறம் படத்தொகுப்பை பஞ்சு "பஞ்சாபி" என்ற புனைப்பெயரில வேலை பாத்தாரு. படப்பிடிப்பு 1950-ஆம் ஆண்டுல தொடங்கி ரெண்டு வருஷமா படப்பிடிப்பு போச்சு.
இந்த படம் நெறய நாட்கள் வெற்றிகரமா ஓடி வர்த்தக ரீதியாவும் வெற்றி அடைஞ்சுச்சு னு தான் சொல்லணும். அப்போ இருந்த நெறய செய்தி தாள்கள் கலைஞர் ஓட டயலாக்ஸ் யும் சிவாஜி கனேசன் ஓட நடிப்பையும் பெரிதளவு ல பாராட்டி போட்டு இருந்தாங்க. இருந்தாலும் S. Theodore Baskaran.படி அதிகமான சர்ச்சைக்குள்ளான படம் ந அது பராசக்தி னு தான் சொல்லுறாரு. அது என்னனு பாத்தீங்கன்னா பிராமணர்கள் களையும் இந்து பழக்கவழக்கங்கள், மரபுகளை எதிர்மறையாகக் காமிச்சதுக்காக பல சர்ச்சைகளுக்கு உண்டாச்சு னு தான் சொல்லணும். இதுனால உயர்ந்த சமுதாயத்தினர் யும் தமிழக அரசாங்கமும் சேர்ந்து, இந்த படத்தை தடை செய்யணும் னு சொன்னாங்க. அப்போ மெட்ராஸ் ஓட CM அ இருந்த Rajagopalachari இந்த படத்தை ரிலீஸ் பண்ண allow பண்ணாரு. இந்த படம் ரிலீஸ் ஆகி ஆறு மாசத்துக்கு அப்புறம் பராசக்தி யா கல் னு சொல்ற சீன் யும் , கோயில் பூசாரி ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடத்துகிற scene யும் படத்துல இருந்து தூக்கிட்டாங்க. இருந்தாலும் இந்த படத்தோட தாக்கமும், இதுல சொல்ல வர கருத்தும் இன்னிக்கு வரைக்கும் நிலைச்சு நிக்குது னு தான் சொல்லணும். சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதை என்னனு பாப்போம்.
சந்திரசேகரன், ஞானசேகரன் மற்றும் குணசேகரன் னு மூணு அன்னான் தம்பிங்க பர்மா ல இருக்கற ரங்கூன் ன்ற ஊர்ல தங்கிட்டு இருப்பாங்க. சந்திரசேகர் அவரோட மனைவி சரஸ்வதி ஓட இருப்பாரு. இவங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்கும் அவங்க பேரு தான் கல்யாணி. இவங்க அவங்க அப்பா மாணிக்கம்பிள்ளை கிட்ட மதுரை ல இருப்பாங்க. 1942-ல உலகப் போர் நடந்துட்டு இருக்கும் போது மூணு பேரும், அவங்களோட தங்கச்சி கல்யாணத்துக்காக மதுரை க்கு போகணும்னு முடிவு பண்ணுவாங்க. போர் ஓட நிலைமை அப்புறம் பர்மா ஓட கப்பல்களை தாக்குறது னால ஒரே ஒரு டிக்கெட் தான் குடுப்பாங்க இதுனால கடைசி தம்பியான குணசேகரன் அதைப் வாங்கி தமிழ்நாட்டுக்குப் புறப்படுறரு . போர் னால கப்பல் ரொம்ப தாமதமா தான் தமிழ்நாட்டு க்கு வருது, இதுனால அன்னான் கல் யாரும் இல்லாம கல்யாணி ஓட கல்யாணம் நடந்து முடிஞ்சுடுது.
கல்யாணி கர்ப்பம் ஆகுறாங்க . ஆனால், அவங்களுக்கு குழந்தை பிறக்குறை அதே நாலு ல தான் தங்கப்பன் ஒரு விபத்தில இறக்கிறாரூ இதுனால மணிக்கம்பிள்ளை அதிர்ச்சியால இறந்துடுறாரு,கல்யாணி யும் இவங்களோட குழந்தை யும் ஆதரவில்லாமல இருக்கறாங்க .அப்போ தான் இவங்களோட வீடு ஏலம் க்கு விட்டுட்ருங்க , வேற வழி இல்லாம தெருல உணவுப் பொருள் எல்லாத்தயும் விற்பனை செய்து அவங்களோடயே வாழ்க்கையை நடத்துரங்க . குணசேகரன், கடலில் பல மாதமா சிக்கித் தவித்து, கடைசியா சென்னை வராரு. ஆனா, ஒரு நடன நிகழ்ச்சி அ பாக்கும் போது, ஒருத்தர் இவருக்கு மயக்கத்தை உண்டாக்கி, அவருடைய பொருள்களும் கொள்ளையடிசிட்டு போய்டுறாரு . இவரோட வாழக்கை ல தொடர்ந்து நெறய விஷயங்கள் மோசமா நடக்கவே பைத்தியமா நடிக்கிறாரூ. அப்புறமா குணசேகரன், அவருடய தங்கையை மதுரையில பாக்குறாரு, அப்போ தான் இவருடைய அப்பா மரணமும் தங்கச்சி ஓட வறுமையையும் தெரியவருது. இவரும் வறுமைல இருக்கறதுனால தங்கச்சி கிட்ட தான் யாரு னு சொல்லிக்காம இருந்துடுறாரு. இவரு ஒரு பைத்தியமா தன்னோட தங்கச்சிய சுத்தி சுத்தி வருதுனாலே கல்யாணி க்கு இந்த ஆளு மேல வெறுப்பு அதிகமா வருது. இன்னும் வரையும் இவரு நம்மோட அன்னான் தெரியாம இவங்களும் இருக்காங்க.
ஒரு கட்டத்துல கல்யாணி ஒரு வில்லன் வேணுவால கிட்டத்தட்ட பலாத்காரம் பண்ண போற சமயத்துல , குணசேகரன் காப்த்திவிட்டுறாரு . அப்புறமா , கல்யாணி மதுரையை விட்டு திருச்சிக்கு போறாங்க , அங்க கருப்புச்சந்தை வியாபாரி நாராயண பிள்ளையின் வீட்டில் வேலை செய்யறாங்க, இங்கயும் இந்த ஆளு இவங்ககிட்ட தப்பா நடந்துக்கும் போது, நாராயண பிள்ளை ஓட மனைவி காப்பதிவிட்டுறாங்க இந்த பிரச்சனை னால இங்க இருக்குற வேலையும் விட்டுடறாங்க. தன்னோடைய தங்கச்சி யா தேடி வந்த குணசேகரன் திருச்சிக்கு வராரு இங்க பணக்காரியான விமலா வ சந்திக்கறாரு. அவங்க கிட்ட இவரை பத்தியும் தங்கச்சிய பத்தியும் சொல்லறாரு அவங்க வீட்ல ஒரு நாள் தங்கிட்டு, அங்க இருந்து எதுவும் சொல்லாம வெளில வந்துடுறாரு அப்புறமா தன்னோட தங்கச்சி யா தேட ஆரம்பிக்குறாரு.
ஜப்பான் ஆட்கள் ஓட தாக்குதல்கள் பர்மாவில் அதிகம் ஆகும்போது , சந்திரசேகரனும் ஞானசேகரனும் இந்தியாவிற்கு திரும்ப வராங்க.. சந்திரசேகரன், சரஸ்வதி ஓட திருச்சி க்கு வந்து நீதிபதி ஆயிடுறாரு, ஆனால் ஞானசேகரன் வர வழி ல தொலைஞ்சு போய் ஒரு கால் அ இழந்துடுறாரு. கடைசில பிச்சை எடுக்கற நிலைமை க்கு தள்ள படுறாரு. இதுனால பிச்சைக்காரர்களுக்குனு ஒரு சங்கத்தை உருவாக்கி அவங்கள சீர்திருத்த வேலைகளை பண்ண ஆரம்பிக்குறாரு. கல்யாணி, சந்திரசேகரனின் ஓட வீட்டுக்கு சாப்பாடு கேட்டு வருவாங்க , சந்திரசேகரன் க்கு தன்னோட தங்கச்சி அடையாளம் தெரியதனால வீட்டை விட்டு தொரத்தி விட்டுவாரு. கடைசியா ஒரு கோயில்க்கு போய் ஒரு பூசாரி கிட்ட உதைவி கேட்க்கும் போது அவரும் தப்பா நடனத்துக்கு முயற்சி பண்ணுறாரு. இப்படி வாழக்கை முழுவதும் கஷ்டங்கள் தான் வந்துட்டு இருக்குனும், குழந்தைக்கு உணவு கொடுக்க கூட முடியாதனல கல்யாணி ஒரு ஆத்துல குழந்தையை தள்ளி விட்டு , தானும் தற்கொலை செய்ய பாக்குறாங்க , ஆனா கொஞ்ச நேரத்தில் குழந்தை யா கொலை செய்ஞ்சதுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வந்துடுறாங்க.
நீதிமன்றத்தில், தான் ஏன் குழந்தையை கொலை செய்ஞ்சன் என்றத்துக்கு விளக்கம் குடுக்கறாங்க அங்க நீதிபதியை இருக்கிறது இவங்க அன்னான் சந்திரசேகரன் தான். அங்க நிக்கிறது தன்னோட தங்கச்சி னு தெரியவரும்போது அதிர்ச்சி தாங்காம மயக்கம் போட்டு கீழ விழுந்துடுறாரு.
அதே சமயத்துல குணசேகரனும், பூஜாரியை அடிச்சதுக்காக நீதிமன்றத்தில வந்து நிக்க வைக்கிறாங்க , அவரும் அவரோட கஷ்டங்களை சொல்லுறாரு. இங்க தான் சமூகத்துல நடக்கற கொடுமைகளை சொல்லுறாரு. இந்த வழக்கு நடுக்கும் போது விமலா கல்யாணி ஓட குழந்தைய அவங்க கிட்ட குடுக்கறாங்க. உண்மையா சொல்ல போன அந்த கொழந்தை தண்ணி ல விழம படுகு ல விழுந்திருக்கும். இதுக்கு அப்புறம் கல்யாணி யும் குணசேகரன் யும் நீதிமன்றத்தால மன்னிப்பு வழங்கி விட்டுறாங்க. இதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் சந்திரசேகர ஓட ஒன்னு சேந்துடுறாங்க. ஞானசேகரன் அவரோட பிச்சைக்கார சங்கத்திற்காக நன்கொடை வாங்கும் போது திடீரென இவங்களோட சேந்துடுறாரு. விமலா யும் குணசேகரன் யும் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணுறாங்க. இதுக்கு அப்புறமா ஆதரவற்ற குழந்தைகளுக்கான எல்லா நல்ல விஷயங்களையும் இந்த குடும்பம் பண்ண ஆரம்பிக்குது.
உங்களுக்கு ஒன்னு தெரியுமா என்னதான் சிவாஜி கணேசன் ஓட முதல் படமா இது இருந்தாலும், இவரோட நடிப்பை மெய்யப்பன் க்கு பிடிக்கவேயில்லயே அதுனால K R ராமசாமி யா இவருக்கு பதிலா நடிக்க வைக்கலாம் னு சொன்னாரா. ஆனா பெருமாள் தான் இவரே நடிக்கட்டும் சொல்லி சிவாஜி யா நடிக்க வச்சுரு. அதுமட்டும் கிடையாது என்ன என்ன scenes லாம் பிடிக்கலையோ அதெல்லாம் மறுபடியும் எடுத்து அதுக்கு அப்புறம் தான் release பண்ணிருக்காங்க. அப்போ சிவாஜி கணேசன் இந்த படத்துக்கு 250 ரூபா னு மாசம் சம்பளம் வாங்கிட்டு இருந்துக்குறாரு. அப்போ இருந்த C. N. Annadurai. ன்ற பெரிய politician ஓட வார்த்தைகளை கேட்டு நாடக கலைஞர் அ இருந்த S. S. Rajendran, இந்த படத்துல நடிக்க சம்மதிச்சாரு. Sriranjani Jr. க்கு பதிலா Rajasulochana நடிக்க வேண்டியதா இருந்தது ஆனா அவங்களோட pregnancy காரணமா இந்த படத்துல அவுங்க நடிக்கல. 1950 ல ரிலீஸ் ஆனா ராஜா விக்ரமா ன்ற படத்துல பண்டாரி பாய் ஓட நடிப்பை பாத்து இந்த படத்துக்கு வாய்ப்பு குடுத்திருக்காரு மெய்யப்பன். இந்த படத்துல கடைசியா ஒரு பாட்டு வரும் எல்லாரும் வாழ வேண்டும் னு அந்த சோங் ல அப்போ தமிழ் நாட்டு ல இருந்த அரசியல்வாதிகள் ஆனா C. Rajagopalachari, E. V. Ramasamy, M. Bhaktavatsalam, Annadurai, and Karunanidhi. னு இவங்க எல்லாரையும் காமிச்சிருப்பாங்க.
இந்த படத்துல DMK யும் அவங்கள பத்தின விஷயங்கள் நெறய இருக்குனு தான் சொல்லணும். அதெல்லாம் என்னனு பாப்போம். இந்த படத்தோட title song அ பாரதிதாசன் தான் எழுதிருப்பாரு த்ராவிடத்தோட பார்வைல நம்ம நாடு எப்படி இருக்கும்ன்றது தான் பாடல் அ அமைச்சிருக்கும். இந்த படத்துல கல்யாணி க்கு பொண் கொழந்தை பிறந்த nagammai நும் பையன் பொறந்த pannirselvam னு பேர் வைக்கலாம் னு முடிவு பண்ணுவாங்க . nagammai றவுங்க அப்போ இருந்த Self-Respect Movement ல ஒரு activist அ இருந்தாங்க இவங்க E V Ramasamy ஓட மனைவி யும் கூட . pannerselvam ன்றவூரு அப்போ இருந்த justice party ஓட தலைவர் அ இருந்தாரு . அந்த காலத்துல இந்த படம் ஒரு சமூக புரட்சி யா அமைச்சிருந்தது னு கூட சொல்லலாம் அது மட்டும் கிடையாது. அப்போ இருந்த பெரிய செய்தி நாளிதழ் எல்லாம் இந்த படத்தை "sociological satire" னு சொல்லி இருந்தாங்க. என்னதான் இந்த படத்துல பாதிக்கு மேல கல்யாணி யா சுத்தி கதை நடந்தாலும், இந்த படத்தோட எழுத்தாளர் கல்யாணி னு பேரு வைக்கறதுக்கு ஒரு காரணம் இருக்குனு தான் சொல்லணும். gunasekaran ஓட ஒரு dialogue னு ஒன்னு வரும், அதுல என்னோட தங்கச்சி பேரு கல்யாணி ரொம்ப மங்களகரமான பேரு ஆனா அவளோட கழுத்துல தாலி இல்ல னு சொல்லுவாரு. இங்க தான் இந்த பேருக்கும் இவங்க வாழக்கை ல நடக்கற விஷயங்களை contrast அ எடுத்து சொல்லிருப்பாங்க. இந்த படத்துல ஜாதி மதம் னு சொல்லி அதுல நடக்கற ஏமாத்து வேலைகளும், அப்போ மெட்ராஸ் அ ஆட்சி பண்ணிட்டு இருந்த congress க்கு எதிரா கருத்துகள் இருக்கற மாதிரி தான் இந்த படத்தோட கதை இருந்துச்சு னு தான் சொல்லணும்.
இந்த படத்துல வர ஒரு சில songs அ பாத்தீங்கன்னா ஹிந்தி ல இருந்தும் பாகிஸ்தானிய உருது ல இருந்தும் வந்த பாட்டுகளோட அடிப்படில தான் அமைச்சுது. அதுல ஒரு சிலது பாத்தீங்கன்னா poomalai ன்ற பாட்டு duppatta ன்ற படத்துல வர "Sanwariya, Tohe Koi Pukare" ன்ற பாட்ட அடிப்படையா வச்சு வரும், புது பெண்ணின் ன்ற பாட்டு Patanga ன்ற படத்துல உள்ள ஒரு பாட்ட அடிப்படையா வச்சு வந்திருக்கும். இந்த படத்துல மொத்தமா 11 பாட்டு இருக்கும் 2009 june 3 ஆம தேதி கலைஞர் ஓட 86 வது பிறந்தநாளை கொண்டாடற விதமா இந்த படத்தோட பாட்டு எல்லாத்தயும் remix பண்ணி இருந்தாங்க.
என்னதான் இந்த படத்தோட songs music னு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த படத்துல உள்ள dialogues க்கு பெரிய fanbase அ இருக்குனு தான் சொல்லணும். அந்தளவுக்கு உணர்ச்சி பூர்வமா ட்ராவிடத்தையும், சமுதாய மாற்றத்தை நோக்கி இருக்கற படம் தான் பராசக்தி னு சொல்லலாம். இதுல வர ஒரு சில dialogues அ பாப்போம்.
சமுதாய வளர்ச்சி கிளையை அறுப்பதில்லை ஆணி வேரை பெயர்ப்பது னு பண்டாரி பாய் சிவாஜி கணேசன் ஓட சுயநலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பாங்க. இந்த நாட்டுல எப்படி ஏழைகள் அ தள்ளி வச்சுருக்காங்க அவங்கள எப்படி இந்த உயர்ந்த சமூகம் பாக்குதுனு னு சொல்லும் இந்த வரிகள். “குதிரை க்கு பதிலா நரம்பு தெறிக்க தெறிக்க rickshaw இழுத்து கூனி போயிருக்கானே . நாயைப்போல சுருண்டு நடைபாதையில் குடும்பத்தோடு தூங்குகிறான் . நாலு கால் பிராணியை ஆக பாட்ட மனிதனை சொன்னேன் . னு குணசேகரன் அ நடிச்ச சிவாஜி சொல்லிருப்பாரு. ” இன்னொரு scene அ பாத்தீங்கன்னா ஒரு ஹிந்தி பேசுற தமிழ் ஆளு மன்னிப்பு கேட்கும் போது சிவாஜி maaf karaojiyavuthu மண்ணாங்கட்டி கரோஜி ஆவுது னு நக்கலா பேசிட்டு வருவாரு. அதே மாதிரி பாத்தீங்கன்னா கலைஞர் ஓட நாத்திக தன்மையும் நெறய இந்த படத்துல தென்படும். குணசேகரன் ஒரு பழத்தை திருடிட்டு போகும் போது அந்த கடைக்காரரு கடவுள்க்கிட்ட வேண்டிட்டு இருப்பாரு. இதை பாத்த குணசேகரன் தெய்வம் தான் கேட்கலையே, அவரு மனசு தான் கல்லா போச்சே னு சொல்லுவாரு. இதே மாதிரி இன்னொரு சீன் அ பாத்தீங்கன்னா அம்மாள் சிலைக்கு பின்னாடி இருந்து வந்து எல்லார்கிட்டயும் அம்பாள் எந்த காலத்துல பேசினா ? னும் கேட்பாரு. இந்த மாதிரி ஒரு change அ அந்த காலத்துல கொண்டு வந்துருக்காங்க ன்றது ஆச்சிரியம். அதுனால தான் இன்னிக்கு வரைக்கும் இந்த படம் பெரிதளவு ல cult classic னு சொல்ல படுத்து.
இந்த படத்துல பெரிய highlight அ அந்த court scene தான். இந்த படத்துல music அ விட dialogues க்கு பெரிதளவு ல importance குடுக்க பட்டது னு தான் சொல்லணும். இந்த படம் வெற்றிகரமா 175 நாட்களுக்கு ஓடிச்சு அது மட்டும் கிடையாது அப்போ பெரிய theatre அ இருந்த மதுரை ல இருக்கற thangam theatre க்கு இது தான் முதல் படமா screening பண்ணனாக. srilanka ல இருக்கற mailan theatre ல இந்த படம் 40 வரம் ஓடிச்சு அதுக்கு அப்புறம் இந்த படத்தை telugu ல dub பண்ணி 1957 jan 11 அன்னிக்கு ரிலீஸ் ஆகா பட்டது.
அப்போ இந்த படம் எந்தளவுக்கு தாக்கம் இருந்துது ந இந்த படத்துல வர டயலாக்ஸ் ல பேசி மார்க்கெட் ல காசு ல வாங்குவாங்களா. வெறும் பாட்டுக்கு மட்டும் casette இல்லாம dialogues க்கும் தனியா casette போட்டு பிரபல படித்துருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படம் வந்த பிறகு தமிழ்நாடு ல காங்கிரஸ் யா கவிழ்க்கர அளவுக்கு DMK க்கு பவர் கிடைச்சது. இந்த படத்துக்கு அப்புறமா DMK ஓட powerful person அ இருந்தாரு சிவாஜி கணேசன். இன்னிக்கு வரைக்கும் இந்த படத்தோட reference அ சூப்பர்ஸ்டார் ரஜினி ல இருந்து காமெடி ஆக்டர் விவேக் வரைக்கும் அவங்க நடிச்ச படத்துல பேசிருக்காங்க.
பராசக்தி தமிழ் சினிமாவில ஒரு trendsetter னே சொல்லலாம். நகைச்சுவை, நாடகம் அப்புறம் சமூக விமர்சனம் னு ரொம்ப சக்திவாய்ந்த படமா எதிர்காலத்துல வர படங்களோட கதைக்கள அமைப்பை மாற்றியமைத்தது இந்த படம் னு தான் சொல்லணும்.
சமூக மாற்றம், மதம், அரசியல் னு எல்லாத்தயும் சொல்லற ஒரு கதையா யோசிக்க வைக்கிற உரையாடல்கல் ,சமூக சிக்கல்களை எடுத்து சொல்லற படமா இருக்கறதுனால, இதை cult classic படமா இன்னிக்கு வரைக்கும் நிலைச்சு நிக்குது.
No comments:
Post a Comment