Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Saturday, 8 February 2025

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025




ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025 க்கான மிக உயரிய விருதாக கருதப்படும் NETPAC விருதினை   'Bad Girl' திரைப்படம் வென்றுள்ளது.


ராட்டர்டாம், நெதர்லாந்து -


 இயக்குனர் வர்ஷா பாரத்தின் முதல் திரைப்படமான 'Bad Girl', சர்வதேச திரைப்பட விழா ராட்டர்டாம் (ஐ. எஃப். எஃப். ஆர்) 2025 இல் NETPAC விருதை வென்றுள்ளது. இது தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் தருணமாகும்.


NETPAC விருதானது (Network for the Promotion of Asian Cinema)  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த ஒரு தனித்துவமான திரைப்படத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் இயக்குநர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதத்தில் முதல் மற்றும் இரண்டாவது திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரத்தின் மூலம், 'Bad Girl' திரைப்படம் தனது இடத்தை, தமிலில் கதைசொல்லலுக்கான சிறப்பையும் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கான   வலிமையையும் உலகளாவிய சினிமா அரங்கில்  உறுதிப்படுத்தியுள்ளது.


* தமிழ் சினிமாவின் மைல்கல் *


அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் ஆகியோரால் தயாரிக்க ப்பட்ட 'Bad Girl' படம், அதன் அழுத்தமான கதை மற்றும்  நடிப்பால் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்த ஒரு தைரியமான மற்றும் அழுத்தமான படைப்பு. இந்த வெற்றியானது உலகளாவிய சினிமா வட்டாரத்தில், வளர்ந்து வரும்  தமிழ் சினிமாவின்  செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும்  புதிய திரைப்பட படைப்பாளிகளுக்கு திறவுகோலாக அமைந்துள்ளது. 


 *நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் *




 எழுத்து & இயக்கம்: வர்ஷா பரத்


தயாரிப்பு: வெற்றி மாறன்


இசை: அமித் திரிவேதி


தயாரிப்பு நிறுவனம்: கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி


* நடிகர்கள்*


அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன்


* தொழில்நுட்பக் குழுவினர் *


ஒளிப்பதிவு: ப்ரீதா ஜெயராமன் (ISC) ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன்


எடிட்டிங்: ராதா ஸ்ரீதர்


தயாரிப்பு வடிவமைப்பு: வி. ஷண்முகராஜா


ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி மஞ்சரி


Casting: வர்ஷா வரதராஜன்


Intimacy ஒருங்கிணைப்பாளர்: ஜெயலட்சுமி சுந்தரேசன்


ஒலி வடிவமைப்பு: வினோத் தானிகாசலம்


சவுண்ட் மிக்ஸ்: பிரதாப்


DI & கலரிஸ்ட்: இன்ஃபினிட்டி மீடியா, சிவ சங்கர்


VFX தலைவர்: ஆர். ஹரிஹர சுதன் (Lorven)


தயாரிப்பு மேலாளர்: வெ. கி. துரைசாமி


ஸ்டில்ஸ்: அமீர் ராஜ்


விளம்பர வடிவமைப்பாளர்: பரணிதரன்


பி. ஆர். ஓ: ரேகா


சிஓஓ: (கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி) அப்துல் ரஹ்மான்


நிர்வாக தயாரிப்பாளர்: விக்ரம் வைபவ் ஆர். எஸ்


 உலகத் தரத்திற்கு இணையான  கதை சொல்லாடல் மற்றும் நேர்த்தியான தொழில்நுட்பம்  ஆகியவற்றால் 'Bad Girl' திரைப்படமானது பாரம்பரிய தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.  இந்த விருது திரைத்துறையின் பயணத்தில்ஒரு புதிய அத்தியாயத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், புதிய சிந்தனைகளை கொண்ட இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. 


 ஒரு தமிழ் படம் உலக அரங்கில் இவ்வளவு பெரிய விருது பெற்றிருப்பதை  திரைத்துறையினரும்  ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.IFFR 2025 ல் 'Bad Girl' படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, அந்தப் படக்குழுவிற்கான  வெற்றி மட்டும் அன்று. உலக அரங்கில் இந்திய சினிமாவிற்கும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கும் கிடைத்திருக்கும் வெற்றி.

No comments:

Post a Comment