Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Thursday, 6 February 2025

யுனிவர்சல் பிக்சர்ஸ் 'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய

 *யுனிவர்சல் பிக்சர்ஸ் 'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய ரகசியங்கள் மற்றும் சிறந்த சினிமா அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது!* 




மும்பை, பிப்ரவரி 6, 2025: வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள ஜூராசிக் பார்க் பட ரசிகர்கள் மீண்டும் தங்களுக்கு விருப்பமான உலகத்தில் நுழைய இருப்பது குறித்து  உற்சாகமாக உள்ளனர். பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய பிரபஞ்சத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. 


இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.


2 நிமிடம் 25 வினாடிகள் டிரெய்லரில் பல ஆக்‌ஷன் சாகசங்களும் திருப்பங்களுடன் கூடிய அறிவியல் கதையும் நிறைந்துள்ளது. திரைப்படம்  ஜூலை 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment