Featured post

First Look of Kiara Advani as ‘Nadia’ Unveiled from Yash’s ‘Toxic: A Fairytale for Grown-Ups

 First Look of Kiara Advani as ‘Nadia’ Unveiled from Yash’s ‘Toxic: A Fairytale for Grown-Ups’* One of the most anticipated films of 2026, R...

Wednesday, 5 February 2025

தங்க பதக்கம் வென்ற திரைப்பட தொகுப்பளரின் மகள் யோமிதா

 *தங்க பதக்கம் வென்ற திரைப்பட தொகுப்பளரின் மகள் யோமிதா*








*இந்தியாவிற்காக ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் களமிருங்கும் யோமிதா*


மஞ்சப்பை கடம்பன் போன்ற பல்வேறு திரைபடங்களில் படதோகுப்பளராக பணிபுரிந்த திரு.தேவா அவர்களின் மகள் “யோமிதா“ சென்னை கேகே நகரில் உள்ள SPUNK  ROLLER SKATING அகடாமியில் தனது ஆறு வயது முதல் திரு.ராஜா என்பவரிடம் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்கிறார். இவர் இதுவரை நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு 23-தங்க பதக்கம், 4-வெள்ளி பதக்கம், 2-விருது, 3-தனிப்பட்ட CHAMPIONSHIP TROPHY பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மதுரையில் SPEED SKATING FEDRATION OF INDIA- (SSFI) நடத்திய 24வது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இருந்து 1200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் யோமிதா UNDER-8 பிரிவில் பங்கேற்று 200 மீட்டரிலும், 400 மீட்டரிலும் இரண்டு பிரிவிலும் தங்க பதக்கமும் பெற்று தனிப்பட்ட சாம்பியன் ஷிப் கோப்பையும் (INDIVIDUAL CHAMPIONSHIP TROPHY) கைப்பற்றினார். மேலும் இவர் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக இந்தோனேசியாவில்  கலந்து கொள்ள உள்ளார்...

1 comment: