Featured post

I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein

 *”I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein* _Tere Ishk Mei...

Monday, 3 February 2025

மோகன்லாலின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமான 'விருஷபா'

 *மோகன்லாலின்  மிகப் பிரம்மாண்டமான திரைப்படமான 'விருஷபா' படத்தின்  படப்பிடிப்பு நிறைவு பெற்றது!*






முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'விருஷபா' படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.  இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர்,  அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டிக் கொண்டாடினர். 


புகழ்மிகு இயக்குநர் நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில்,  கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும்  இப்படம்,  உணர்ச்சிமிகு கதைக்களம் மற்றும் புராணங்களின் தனித்துவமான கலவையுடன், மிரட்டலான ஆக்சன் காட்சிகளுடன், இந்தியாவின் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகிறது. 


இப்படம் பான் இந்திய அளவில் அனைத்து பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில்,  மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுடன், இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். திறமைமிகு முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களின் கை வண்ணத்தில்,  மயக்கும் ஒளிப்பதிவு, மிரட்டலான சண்டைக் காட்சிகளுடன், ஒரு அற்புதமான காட்சி  அனுபவமாக உருவாகியுள்ளது.


படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாகத் துவங்கியுள்ளது. உலகளாவிய தரத்திலான விஷுவல் எஃபெக்ட்ஸ், எடிட்டிங்க் மற்றும் ஒலி வடிவமைப்புடன், "விருஷபா" மெகா பட்ஜெட்டில் ஒரு புதுமையான சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது 


விருஷபா திரைப்படம், தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் என ஐந்து மொழிகளில் 

2025 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.  இப்படம் இந்தியா மற்றும் உலகளவில் மிகப்பெரிய  பாக்ஸ் ஆபிஸ் ப்ளாக்பஸ்டராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 


ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்ம குமார், வருண் மாத்தூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. படத்தின் விளம்பர பணிகள் தற்போது பரபரப்பாகத் துவங்கியுள்ளது.  திரைக்குப் பின்னால் நடந்த காட்சிகள், போஸ்டர்ஸ், சிங்கிள்ஸ் என வரிசையாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. பார்வையாளர்கள் இதுவரையில்  திரையில் பார்த்திராத ஒரு புதுமையான அனுபவமாக இப்படம் இருக்கும்.

No comments:

Post a Comment