Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Friday, 7 February 2025

தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர்

 *தமிழ்நாடு வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அமைப்பு (PoE), பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கான வாக்கத்தானை (Walkathon) பிப்ரவரி 8, 2025 அன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காலை 7:30 மணிக்கு முன்னெடுக்கிறது!*



வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மோசடி குறிப்பாக டேட்டா என்ட்ரி, சிஸ்டம் ஆபரேட்டர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதே போன்ற வேலைகளுக்கான மோசடிகள் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த வாக்கத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மோசடிகள் இதற்கு முன்பு பல இந்திய குடிமக்களை இணைய அடிமைத்தனம் மற்றும் சுரண்டலுக்கு இட்டுச் சென்றுள்ளது.


PoE அலுவலகம் சட்டவிரோத முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற மோசடி திட்டங்களுக்கு பலியாகாமல் தனிநபர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.


இந்த வாக்கத்தான் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைகிறது. ’பாத்து போங்க’ என்ற பெயரில் PoE அலுவலகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்ற நடைமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலை வாய்ப்புகளின் அபாயங்கள் குறித்து கற்பிக்கும்.


பொதுமக்கள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள் என அனைவரும் இந்த வாக்கத்தானில் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்பதற்கான சான்றிதழைப் பெற www.emigrate.gov.in/#/walkathon என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். 


மோசடிகளில் இருந்து அனைவரையும் பாதுகாக்கவும் சரியான தகவல்களுடன் அதிகாரம் கொடுக்கவும் இந்த வாக்கத்தானில் இணைவோம்! பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்குவோம்!

No comments:

Post a Comment