Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Wednesday, 5 February 2025

விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு

 *“’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு” நடிகை ரெஜினா காசண்ட்ரா!*



மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “டிரெய்லர் மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார். 


தன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றவர் ரெஜினா. இந்தப் படத்திற்காக, இன்னும் கடுமையாக உழைத்திருக்கிறார். “இந்தப் படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் சார் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரது அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது”.


அஜர்பைஜான் நாட்டின் கிளைமேட் பற்றி கேட்டபோது, “அஜர்பைஜானில் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்தியபோது சரியான நேரத்தில் மாலைக்குள் எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம்.  மகிழ் சார் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் சரியாக திட்டமிட்டு அதை முடித்தோம்”. 


ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பணிபுரிந்தது பற்றி கேட்டபோது, “படத்தில் மூன்று ஜார்ஜியன் ஸ்டண்ட்ஸ் மேனுடன்  ஒரு ஆக்‌ஷன் சீக்வன்ஸ் உண்டு. அதற்கான இன்புட்ஸை படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டரிடம் கேட்டுவிட்டு ஒரே டேக்கில் அந்த காட்சியை அர்ஜூன் சார் செய்து முடித்தார். அந்த ஸ்டண்ட் மேன்ஸ் அவரது ஆக்‌ஷன் மற்றும் வயதை கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய்விட்டனர்” என்றார். 


நடிகர் அஜித்துடன் பணிபுரிந்தது பற்றி கேட்டபோது, “அவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் செட்டில் பயங்கர எனர்ஜியுடன் இருந்தார். முதல் நாளில் இருந்து படப்பிடிப்பின் கடைசி நாள் வரை நட்புடன் எங்களுடன் பழகினார்” என்றார். 


’விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

No comments:

Post a Comment