Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Thursday, 13 February 2025

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ரெட்ரோ”

 *நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே”  ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது*



முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்,  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும்   “ரெட்ரோ” படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை மனங்களை கொள்ளை கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 


இப்பாடலை, பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். 



ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். 


ஆக்சன் கலந்த ரொமாண்டிக்  என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 


இப்படம் உலகமெங்கும் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


https://youtu.be/eNX9VqUzBco

No comments:

Post a Comment