Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Sunday, 9 February 2025

நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை

 *நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை இயக்குநர் ராம் கோபால் வர்மா இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டார்!*










பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ சீரிஸை எடுத்துள்ளார். இதன் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராம் கோபால் வர்மா கலந்து கொண்டார். 


நிகழ்வில் ராம் கோபால் வர்மா பேசியதாவது, "நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை வெளியிடும் நிகழ்வில் நான் சிறப்பு விருந்தினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.  இதுபோன்ற புகைப்படங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுதான் இந்தப் புகைப்படங்களின் சிறப்பு.


இந்த ஃபேஷன் ஃபோட்டோ சீரிஸ் ஆராத்யாவை இயற்கையுடன் இணைக்கும் வகையில் மக்காவ் பறவை, இகுவானா, அரிய மஞ்சள் நிற பைதான், கருப்பு நிற ஸ்வான்ஸ், பெரிய பந்தய குதிரை மற்றும்  ஆஸ்ட்ரிச் ஆகிய உரியினங்களை மறுவரையறை செய்கிறது. 


இதற்கான சரியான உடைகளை ஆடை வடிவமைப்பாளர் பிரனதி வர்மா டிசைன் செய்திருந்தார். இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அனைவரையும் கவரும் வகையிலும் தீமில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு விலங்கின் வலிமை, சுதந்திரம் மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் வெவ்வேறு அம்சத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இது அமைந்தது"

No comments:

Post a Comment