Featured post

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”* 
*SJ Suryah Directorial-Starrer “Killer”* 
*Shooting Starts with Ritu...

Monday, 3 February 2025

வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும்

 வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம், 03.02.2025 அன்று நடத்திய நிகழ்ச்சியில் 









பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்.  சுமார் இரண்டாயிரம்  மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் அவர்கள் விடாமுயற்சி திரைப்படம் குறித்த தன்னுடைய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். 






 திறமை அறிவு எல்லாவற்றையும் விட விடாமுயற்சியே வெற்றி தரும் எனக் கூறி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.   மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.  இந்நிகழ்ச்சியில் வேல் டெக் சட்டப் புல முதன்மையர் பேராசிரியர் வேணுகோபால் மற்றும் வணிகவியல் புல முதன்மையர் பேராசிரியர் ஜெயபால் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புல முதன்மையர்  பேராசிரியர் சுரேஷ் பால் அவர்கள்  வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வின் மையமாக நடிகர்கள் ஆரவும் அஜித்குமாரும் இணைந்திருக்கும் புகைப்படமும் ஊடகத்துறை மாணவர் யோகித் வரைந்த ஆரவின் ஓவியமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.  வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கர்னல் டாக்டர். வேல் ஆர். ரங்கராஜன், திருமதி டாக்டர். சகுந்தலா ரங்கராஜன் இவர்களின் ஆசியோடும் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை பேராசிரியர் டாக்டர். ராஜு குப்தா அவர்களின் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர். எபிராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.  நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment