Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 22 May 2025

நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால்

 *"நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துபோயுள்ளேன்" என்கிறார் 'வார் 2' டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜூனியர் என்.டி.ஆர்.*




ஜூனியர் என். டி. ஆர் ஒரு உண்மையான பான் இந்தியா சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் 'மேன் ஆஃப் தி மாஸஸ்' என்று அன்போடு

அழைக்கப்படுகிறார். ‘வார்-2’ வின் டீசர் மூலம் அகில இந்திய அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும்   புகழ் வெளிப்பட்டது, மேலும் ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ் என்ற

படவரிசையில்  மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்த படத்தில் சூப்பர்-ஸ்பை என்ற அவரது நடிப்பு பற்றிய விவாதம் இணையத்தில் மிக வேகமாக பரவியது.


'வார்-2' திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டினால் ஜூனியர் என்.டி.ஆர் பெருமிதம் அடைந்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில்,"ஒரு நடிகராக இருப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், ஏனென்றால் நீங்கள் மக்களின் நிபந்தனையற்ற அன்பை அனுபவிக்க முடியும்". இது மிகவும் மதிப்புமிக்க மற்றும் அரிய உணர்வு, மேலும் இதைப் பெற எனக்கு நிறைய அதிர்ஷ்டம் உள்ளது வார்-2. ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸின் இந்த படம் எனக்கு முற்றிலும் புதிய அவதாரத்தை அளித்துள்ளது, அதை நான் விளக்க நிறைய இருக்கிறது, மேலும் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துபோயுள்ளேன்".


பெரிய திரையின் பொழுதுபோக்காளராக உள்ளே இருந்த ஒவ்வொரு துளி உணர்ச்சியையும் ஆற்றலையும் கொடுத்த பிறகு 'வார்-2' க்கு ஒருமனதான நேர்மறை வெற்றி மற்றும் அன்பை

காண்பது உற்சாகமாக இருப்பதாக ஜூனியர் என். டி. ஆர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


மேலும் ஜூனியர்

என். டி. ஆர் கூறுகையில் "இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வளவு உணர்ச்சியையும், தீவிரத்தையும், ஆற்றலையும் நீங்கள் உங்கள் கதாபாத்திரதில் வெளிப்படுத்தும் போது,எனது ரசிகர்களிடமிருந்தும், பெரிய திரையில் நல்ல சினிமாவைப் பார்க்க விரும்பும் நபர்களிடமிருந்தும் இதுபோன்ற அன்பை பெறுவது இன்னும் உற்சாகமாக இருக்கிறது.


அவர் மேலும்

கூறுகையில் "ஒய். ஆர். எஃப் எப்போதும் புதிய திரைஅனுபவம் மற்றும் உச்சபட்ச வசூல் சாதனைகளை அடைந்ததுடன்,எங்கள் திரைப்படம் விளம்பரப்படுத்துதலின் தொடக்கத்திலேயே மக்களிடம் ஒரு ஆர்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகஸ்ட்-14 ஆம் தேதி வரை திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் வெளியீட்டினை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை."என்றார்.


ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் 'வார் -2' திரைப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். 'வார்-2' ஆகஸ்ட்-14 ஆம் தேதி அன்று  தமிழ் மற்றும் தெலுங்கு,இந்தி மொழிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment