Featured post

ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும்

 *ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்* *ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் ச...

Saturday, 24 May 2025

Ace Movie Review

Ace Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vijaysethupathi நடிப்புல வெளி வந்திருக்க ace படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை arumuga kumar தான் தயாரிச்சு இயக்கியும் இருக்காரு.  Vijay Sethupathi , Rukmini Vasanth,  Yogi Babu, B. S. Avinash , Babloo Prithiveeraj னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



விஜய்சேதுபதி ஒரு பெரிய criminal அ இருப்பாரு. அந்த வாழக்கையை விட்டுட்டு ஒரு புது வாழக்கையை ஆரம்பிக்குறதுக்காக malayasia ல போய் settle ஆகுறாரு. அங்க தான் businessman அ நடிச்சிட்டுருக்கற yogibabu வை meet பண்ணுறாரு. yogi babu இப்படி நடிக்கிறதுக்கு காரணம் ஒரு hotel க்கு owner அ இருக்கற divya pillai அ correct பண்ணுறதுக்கு தான். அதுக்கு அப்புறம் விஜய்சேதுபதி rukmini vasanth அ சந்திக்கறாரு அப்புறம் ஒரு கட்டத்துல இவங்க ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிச்சுடறாங்க. rukmini க்கு பண பிரச்சனை நெறய இருக்கும். அதுமட்டுமில்லாம இவங்களோட அம்மா ரெண்டாவுத்த ஒருத்தர கல்யாணம் பண்ணிருப்பாங்க. அவரு இவங்கள போட்டு ரொம்ப அடிப்பாரு.அதோட  அம்மா ஓட வீட்டை காப்பாத்துறதுக்கு 10 லட்சம் மலேஷியா வெள்ளி தேவைப்படுது ருக்மிணி க்கு தேவைப்படும். அடுத்து பாத்தீங்கன்னா விஜய்சேதுபதி ஒரு கடை ல வேலை பாத்துட்டு இருப்பாரு. இந்த கடை ஓட owner க்கு நெறய கடன் இருக்கும் அதுனால இவரு ரொம்ப கஷ்டப்படுவாரு. இந்த கடை owner ஒரு மில்லியன் மலேஷியா வெள்ளி கட்டலான இந்த  கடை பறிபோயிடும்.  தான் love  பண்ணற பொண்ணுக்கு அவசரமா பணம் வேணும் ண்றதுனால ஒரு எடத்துல போய் சூது ஆடுறாரு விஜய் சேதுபதி . இங்க  தான் avinash அ சந்திக்கறாரு. avinash வட்டி குடுக்கற business அ பண்ணிட்டு இருப்பாரு. அங்க இவரை ஏமாத்தி 5 லட்சத்துக்கு கடனாளியா ஆக்கி விட்டுட்டுடறாங்க.  இந்த மாதிரி தானும், தன்னை சுத்தி இருக்கறவங்க எல்லாருக்கும் பண பிரச்சனை இருக்கறதுனால,  விஜய் சேதுபதி  ஒரு பெரிய எடத்துல திருடனும் னு plan பண்ணுறாரு.  இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.  


கதை ரொம்ப simple அ இருந்தாலும் அதா எடுத்துட்டு வந்த விதம் ரொம்ப அழகா இருந்தது. first half அ இருக்கட்டும் second half அ இருக்கட்டும் ரெண்டுமே ரொம்ப விறுவிறுப்பா போச்சு னு தான் சொல்லனும். படம் thriller range க்கு போனாலும் அங்க romance யும் எடுத்துட்டு வந்து ரெண்டு விஷயங்களும் அழகா balance பண்ணிருக்காரு இந்த படத்தோட director . bolt kannan அ நடிச்சிருக்க விஜய் சேதுபதி ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமான ஒரு ஜாலியான character ல நடிச்சிருக்காரு. அவரு பண்ணுற comedy , நக்கல் எல்லாமே super அ இருந்தது. இவரோட friend அ வர yogibabu படம் full அ comedy counter குடுத்து மக்களை சிரிக்க வச்சுட்டாரு னு தான் சொல்லணும். இவங்க ரெண்டு பேரோட combo super அ இந்த படத்துக்கு set ஆகியிருந்தது. 


rukmini vasanth க்கு இது தான் முதல் படம். ஹீரோவை திருடன் னு சொல்லி மாட்டி விடுறது, அதுக்கு அப்புறம் இவங்க love பண்ண ஆரம்பிக்கிறது, stepfather னால கஷ்டப்படுறது னு இவங்களோட நடிப்பை ரொம்ப அழகா இந்த படத்துல வெளி படுத்திருக்காங்க.  babloo prithiviraj அப்புறம் avinash இவங்க தான் இந்த படத்துல அதிரடியான villain கள வந்து  எல்லாரையுமே மிரட்டிட்டு போயிருக்காங்க னு சொல்லணும். மத்த supporting actors அ நடிச்சிருக்க divyapillai மற்றும் பலர்  அவங்களோட character அ புரிஞ்சுக்கிட்டு தன்னோட best  அ குடுத்திருக்காங்க. 


sam cs ஓட bgm அப்புறம் justin prabhakaran ஓட  songs எல்லாமே இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு.  Karan B Rawat ஓட cinematography super அ இருந்தது. முக்கியமா visuals எல்லாமே bright அ இருந்தது னு தான் சொல்லணும். மலேஷியா  ஓட அழகா அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்துட்டாரு. இவங்க சூதாட்டம் விளையாடுற club அ இருக்கட்டும் இல்லனா குப்பை கிடங்கை இருக்கட்டும் இதெல்லாம் பாக்குறது க்கு அப்படியே ஒரிஜினல் மாதிரி set போட்ருந்த art director ak muthu க்கு ஒரு கை தட்டல் அ குடுக்கலாம். 


மொத்தத்துல comedy , romance , thriller , னு எல்லாமே இருக்கற மாதிரியான ஒரு அருமையான படம் தான் ace . கண்டிப்பா உங்க family and friends ஓட பாக்க வேண்டிய படம். miss பண்ணாம theatre ல போய் பாத்துட்டு வந்துருங்க. என்ன இது ஒரு must watch movie .

No comments:

Post a Comment