Featured post

*India’s Missile Man on the Silver Screen: Dhanush as Dr. APJ Abdul Kalam in Biopic

*India’s Missile Man on the Silver Screen: Dhanush as Dr. APJ Abdul Kalam in Biopic announced at Cannes Film Festival 2025; Directed by Om R...

Thursday, 22 May 2025

நீச்சல் உடையில் வரும் காட்சி பரபரப்பாக காட்சியளிக்க, தனது கட்டுக்கோப்பான

 *'நீச்சல் உடையில் வரும் காட்சி பரபரப்பாக காட்சியளிக்க, தனது கட்டுக்கோப்பான உடலை உருவாக்குவதற்காக கியாரா கடுமையாக உழைத்தார்!' : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா!*




நேற்றைய நாள் முழுவதும் இணையத்தை கலக்கியது வார்-2 டீசர். ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் அதிரடியான சண்டை காட்சிகளில் ஒருவருக்கொருவர் மோதும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், டீசரை இன்னும் பரபரப்பாக்கிய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பவர் கியாரா அத்வானியும்தான்!


எலுமிச்சையின் பச்சை நிறம் கொண்ட கவர்ச்சிகரமான பிகினி அணிந்து, நீச்சல் குளத்தருகில் நடந்து வரும் கியாரா அத்வானி, தனது கட்டுக்கோப்பான உடலமைப்புடன் காட்சியளித்த விதம் நெட்டிசங்களை மயக்கியது.


இந்த தோற்றத்தை உருவாக்கியவர் இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா. இதைப்பற்றி அவர் கூறியதாவது:


“ஒரு படத்திற்காக கியாராவிற்கு நான் ஆடை வடிவமைப்பது இதுவே முதல் முறை, இந்த காட்சிக்கான திட்டமிடல் தான் — 'ஹாட்'! நீச்சலுடை காட்சிகளுக்காக நான் பல படங்களில் பணியாற்றியுள்ளேன், ஆனால் அவற்றை சற்றே சாதாரணமான மனநிலையிலேயே கையாண்டுள்ளேன். இந்தக் காட்சிக்கேற்ப, கடற்கரையில் நீச்சலுடையில் பொதுவாக பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதை பிரதிபலிக்கவேண்டும் — அதாவது சந்தோஷமாக, சுதந்திரமாக, எதையும் மிகைப்படுத்தாமல் இருப்பார்கள். அதுதான் உண்மையான அழகு.”


மேலும் அவர் கூறுகையில் :

“இந்த காட்சியை படமாக்கும் போதே, கியாராவிடம் சொன்னேன் — இதில் இயல்பாக இருங்கள், உன்னை முழுமையாக அனுபவித்து நடியுங்கள், பிகினி அணிந்திருக்கிறேன் என்பதற்காக 'கவர்ச்சியாக இருக்கிறேன்' என்ற எண்ணத்தில் நடிக்கவேண்டிய அவசியமில்லை. இயல்பான தோற்றமே அதிக கவர்ச்சியாக இருக்கும்.”


அதைத் தொடர்ந்து, கியாராவின் பிகினி தோற்றத்தில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை படத்தில் காணமுடியும் என அவர் கூறுகிறார்:

“நாங்கள் தேர்ந்தெடுத்த நிறம் சாதாரணமாக பயன்படுத்தப்படும் நிறமல்லாமல் —பச்சையாகவும் இல்லை, மஞ்சளாகவும் இல்லை. விவரிக்க முடியாத வகையில், இரண்டிற்குமிடையில் ஒரு விதமான பச்சை-மஞ்சள் கலவையில் பார்ப்பவரை உடனடியாக ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.


பிகினியின் வடிவம் மிகவும் எளிமையானது. ஆனால் முன்பக்கத்தில் ஒரு சிறிய சர்ப்ரைஸ் இருக்கிறது — முதல் முறையாக பிகினி சாரம்ஸ் (charms) சேர்க்கப்பட்டுள்ளன. மையத்தில் தொங்கும் அழகான க்ளஸ்டர்() ஒன்று. இது அந்த தோற்றத்திற்கு சற்றே அலங்கரிக்கும் விதமான மற்றும் புதிரான தோற்றத்தை கொடுக்கிறது.”


அனைதா இவ்வாறு தொடர்கிறார்:

“மெட்டலிக் ஷீனும்() மிக முக்கியம். அது ஒரு பிரகாசத்தை தருகிறது—ஒருபுறம் 70-களின் உணர்வு, இன்னொரு புறம் இன்றைய Gen Z தலைமுறையை பிரதிபலிக்கிறது. இது தைரியமான, உற்சாக மனப்பான்மையுடன் இருக்கும், நன்கு தெரிந்த ஒரு ஆடைவடிவமைப்பாக இருக்கும்.”


இவற்றையெல்லாம் சிறப்பாக்குபவர் கியாராதான் என அனைதா குறிப்பிடுகிறார்:

“கியாரா இந்த தோற்றத்தை உருவாக்க மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளார். எவ்வாறு திரும்புகிறேன், என்ன பண்ணவேண்டும் என்பதையும் கூட யோசிக்காமல், அவரது உடலமைப்பில் சுதந்திரமாக இருப்பது போன்ற ஒரு நம்பிக்கையை அவருக்குக் கொடுக்க விரும்பினேன். அவர் அதனை அபாரமாக செய்துள்ளார்! அந்த அற்புதமான உடலமைப்பு; அது அவருடைய இயல்பான கடின உழைப்பின் விளைவு. நான் செய்தது, அதனை அழகாக காட்சிப்படுத்தும் பணிதான்!”


ஸ்பைவர்ஸில் தொடர்ந்து வெற்றிப்படங்களையே அளித்து வரும் யஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யூனிவர்ஸ் படவரிசையில் ஆறாவது படமான 'வார்-2', ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், அயன் முகர்ஜி இயக்கத்தில், ஆகஸ்ட் 14-ம் தேதி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

No comments:

Post a Comment