Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 15 May 2025

Eleven Movie Review

Eleven Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம eleven படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் தமிழ் தெலுகு னு ரெண்டு மொழி ல  எடுத்துருக்காங்க. இந்த படத்துல  crime , mystery , thriller னு எல்லாமே குடுத்துருக்காங்க னு தான் சொல்லணும். lokkesh ajls தான் இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணிருக்காரு. இவரு டைரக்டர் sundar c ஓட assistant director. இந்த படம் மூலமா இவரு director அ cinema ல அறிமுகம் ஆகுறாரு. Naveen Chandra, Reyaa Hari, Shashank, Abirami, Dileepan, Riythvika, Aadukalam Naren, Ravi Varma, Arjai , Kireeti Damaraju னு ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாப்போம். 


 ரொம்ப கஷ்டமான கொலை case அ deal பண்ணி அதா solve பண்ணுறது தான் investigating officer ஆனா naveen chandra ஓட வேலை. அதுனால  இவருக்கு ரொம்ப challenging அ இருக்கிற மாதிரி ஒரு serial killing case அ குடுக்கறாங்க. இந்த case அ ஏற்கனவே deal பண்ண வேற ஒரு officer மர்மமான முறைல இறந்து போய்டுறாரு. இந்த கஷ்டமான case அ naveen  solve பண்ணாரா ? எப்படி அந்த officer இறந்து போனாரு? eleven ன்ற number க்கு பின்னாடி ஒளிஞ்சு இருக்கற மர்மம் என்ன ? கொலைகாரன் யாரு?  எதுக்காக இதெல்லாம் பண்ணறான் ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் தான் பதில் அ இருக்கு. 


இந்த investigation ஆழமா போகும் போது நெறய twist and turns ல இருக்கு. அதெல்லாமே audience க்கு கண்டிப்பா ஆச்சரியமா இருக்குமன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. இந்த படத்துல highlight அ இருக்கிறது naveen chandra ஓட நடிப்பு தான். இவரோட acting , case அ விசாரணை பண்ணற விதம், body language னு எல்லாமே பக்கவா இருந்தது. reyaa hari முக்கியமான கதாபாத்துரத்துல நடிச்சிருக்காங்க. இவங்களோட நடிப்பும்  பிரமாதமா இருந்தது.  supporting actors அ நடிச்சிருக்க Shashank, Abhirami, Dileepan, Riythvika, Aadukalam Naren இவங்களோட நடிப்பும் super அ இருந்தது. 


இந்த படத்தோட technical team அ பத்தி பாப்போம். imman தான் music director அ work பண்ணிருக்காரு. இவரோட bgm தான் ultimate அ தான் இருந்தது. investigation நடக்கும் போதும் சரி இல்லனா பயங்கரமான கொலை நடக்கும் போதும் சரி, இந்த scenes க்கு வர bgm ல மிரட்டல் அ இருந்தது. மொத்தத்துல bgm தான் இந்த படத்தை வேற level க்கு எடுத்துட்டு போயிருக்குனு சொல்லலாம். karthik ashokan ஓட cinematography கதைக்கு super அ பொருந்தி இருந்தது. visuals எல்லாமே bright அ இருந்தது னு தான் சொல்லணும். படத்துல தேவையில்லாத scenes னு எதுவும் இல்லாம audience க்கு interesting அ இருக்கற மாதிரி படத்தை edit பண்ணிருக்காரு editor N B Srikanth . 


low budget படமா இருந்தாலும்,  audience நகம் கடிக்கிற மாதிரி ஒரு super ஆனா crime thriller படத்தை தான் குடுத்திருக்காரு director . கண்டிப்பா crime thriller fans க்கு இந்த படம் ஒரு பெரிய treat அ  இருக்கும். actors ஓட brilliant ஆனா acting , மிரட்டல் ஆனா கதை களம் , அசத்தல் ஆனா bgm ஓட இருக்கிறது தான் eleven திரை படம். இதை must watch movie னு தான் சொல்லுவேன். உங்க family and friends ஓட சேந்து  இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment