Maaman Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மாமன் படத்தோட review அ பாக்க போறோம். soori கதை எழுதி prashanth pandiyaraj இயக்கி இருக்கற action திரைப்படம் தான் மாமன். சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், swasika , Bala Saravanan, Baba Bhaskar, Viji Chandrasekhar, Nikhila Sankar , Geetha Kailasam னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.
வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். girija வா நடிச்சிருக்க swasika தான் inba வா நடிச்சிருக்க soori க்கு அக்காவா இருக்காங்க. girija க்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா கொழந்தை இல்லாம இருக்கும். கிட்ட தட்ட 10 வருஷம் கழிச்சு இவங்களுக்கு ஒரு ஆண் கொழந்தை பிறக்குது. இந்த பையன் க்கு நிலன் னு பேர் வைக்கிறாங்க. இவனை செல்லமா வீட்ல இருக்கற எல்லாரும் லட்டு னு தான் கூப்பிடுவாங்க. ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்த கொழந்தை னால எல்லாரும் இந்த குட்டி பையன் மேல பாசத்தை அள்ளி கொட்டுறாங்க. என்னதான் எல்லாரும் பாசமா இருந்தாலும் நிலன் க்கு தன்னோட மாமன் ஆனா inba வை தான் ரொம்ப பிடிக்கும். இவங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணா தான் இருப்பாங்க. அப்போ தான் inba க்கு gynecologist rekha வா நடிச்சிருக்க aishwarya lakshmi யா கல்யாணம் பண்ணிக்குறாரு. இவங்களுக்கு privacy ஏ இல்லாத மாதிரி இந்த குட்டி பையன் அடிக்கடி வந்துட்றன். அதுனால இவங்க ரெண்டு பேருக்குள்ளயும், குடும்பத்துக்குள்ளயும் சண்டை வருது. இதுக்கு அப்புறம் என்ன ஆகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
garudan , kottukali , னு தொடர்ந்து hit குடுத்துட்டு வந்த சூரி மறுபடியும் ஒரு super hit படத்தை தான் குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். படத்தோட first half ல பாத்தீங்கன்னா comedy ஆவும் family moments அ யும் காமிக்கறாங்க. அப்படியே second half க்கு போனோம் ந ஒரு strong ஆனா message அ சொல்லி படத்தை முடிக்கறாங்க. படத்துல நடிச்சிருக்க ஓவுவுறு characters யுமே நம்மள relate பண்ணிக்க முடியுது. கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை மாதிரியான படங்கள் உங்களுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும். comedy யும் family sentiments யும் சேந்து ஒரு பக்காவான commercial படத்தை director குடுத்திருக்காரு னே சொல்லலாம்.
எமோஷனல் segments னு சொல்லும் போது மாமன் மருமகன் ஓட உறவு, அவங்களுக்கு நடுவுல இருக்கற பாசம், அக்கா தம்பி ஓட உறவு அதுமட்டுமில்லாம ஒரு கணவன் மனைவி குள்ள எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதா பேசி solve பண்ணறது எவ்ளோ முக்கியம், அதோட ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதை கொடுக்கணும் றதயும் இந்த படத்துல சொல்லிருக்காங்க. இந்த விஷயங்கள் மக்கள் க்கு பிடிக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல.
actors ஓட performance னு பாத்தீங்கன்னா. soori ஓட நடிப்பு செமயா இருந்தது. இவரோட சினிமா career ல இந்த படமும் ஒரு plus அ தான் இருக்கும். comedy பண்ணறது அ இருக்கட்டும் emotional scenes அ இருக்கட்டும் ரெண்டுமே balance பண்ணி super அ நடிச்சிருக்காரு. குடும்பத்துல இருக்கற எல்லாருயுமே சூரி எப்படி பாத்துக்குறாரு, ஒரு சிலவங்கள சந்தோசமா வைக்கறதுக்காக எப்படி லாம் கஷ்டப்படுறாரு ன்ற scenes ல பாக்கும் போது ரொம்ப sincere அ இருந்தது. அடுத்து swasika , இவங்க lubber pandhu படத்துல நடிச்சிருந்தாங்க. இந்த படத்துல சூரி ஓட அக்காவா இவங்களோட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருந்தது னு தான் சொல்லணும். aishwarya lakshmi ஓட character இந்த படத்துக்கு கச்சிதமா பொருந்தி இருந்தது. முக்கியமா அந்த சின்ன பையனான laddu வை பத்தி சொல்லியே ஆகணும். இந்த பையன் பண்ணற சேட்டை, soori யும் aishwariya வும் ஒண்ணா இருக்கும் போது இவங்க privacy அ கெடுக்கிறது னு துரு துரு னு சுத்திட்டே இருப்பாரு. இதெல்லாம் ஒரு பக்கம் பாக்கும் போது சிரிப்பா இருந்தாலும் இன்னொரு பக்கம் பாவமா தான் இருக்கு. இருந்தாலும் இந்த குட்டி பையனுக்கு இது முதல் படமா இருந்தாலும் செமயா நடிச்சிருக்காரு.
மொத்தத்துல மனச வருடற மாதிரியான அழகான குடும்ப கதை தான் மாமன். உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment