Featured post

28 YEARS LATER Horror Releasing around the world from

 28 YEARS LATER Horror Releasing around the world from June 18, 2025 Academy Award®-winning director Danny Boyle and Academy Award®-nominate...

Wednesday, 14 May 2025

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

 ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!








திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.


இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இத்திரைப்படத்தை இயக்கும் திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு Feel-Good Emotional Drama ஆக உருவாகிறது. இப்படத்திற்கு அவர் தான் கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.



இயக்குநர் ஷெரீஃப் கூறுகிறார் ‘ரணம் அறம் தவறேல்’ என்ற த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் இயக்கும்  “இந்தக் கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது இரண்டாவது திரைப்படமாக இந்த கதையை தர வேண்டும் என்பதே என் நோக்கம். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு. ஜெய்கிரணிடம் கூறியதும், யோசனையில்லாமல் உடனே ‘ஆம்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையும், நேரடி ஆதரவும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் வழங்கியது. பாலா கதாநாயகனாகவும் ,  தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மேடம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமை நிரம்பியது .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா கொடுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமையும்.”



படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்:


நமிதா கதாநாயகியாக  நடிக்கிறார். தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல்  மற்றும் தேசிய விருது பெற்ற அர்ச்சனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



தொழில்நுட்பக் குழு:


இசை அமைப்பாளர்கள்: விவேக் & மெர்வின் – பட்டாஸ், சுல்தான் போன்ற படங்களில் பணியாற்றியவர்.


ஒளிப்பதிவு: பாலாஜி K ராஜா


படத்தொகுப்பு: சிவனந்தீஸ்வர் – தீரன் அதிகாரம் ஒன்று, வடக்குபட்டி ராமசாமி போன்ற படங்களில் பணியாற்றியவர்.


கலை இயக்கம்: மணிமொழியன் ராமதுரை


தயாரிப்பு மேலாளர்: உதயகுமார் பாலாஜி


வெளியீட்டு வடிவமைப்பு: தினேஷ் அஷோக்


அணிகலன் வடிவமைப்பாளர்கள்: ப்ரியா ஹாரி & ப்ரியா கரண்


பிஆர்ஓ: ரேகா

No comments:

Post a Comment