Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Wednesday, 21 May 2025

மோகன்லாலின் பிறந்தநாளில் அவர் நடிப்பில் தயாராகும் 'விருஷபா' படத்தின்

 *மோகன்லாலின் பிறந்தநாளில் அவர் நடிப்பில் தயாராகும் 'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்*



*'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால், ''இது சிறப்பு வாய்ந்தது. இதை எனது எல்லா ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்'' என குறிப்பிட்டிருக்கிறார்*


*விருஷபா 2025 - அக்டோபர் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது*


'இந்திய சினிமாவின் லாலேட்டன் ' மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள்.‌ அவர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரம்மாண்ட படைப்பான 'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.


டிராகன் அளவிலான வடிவங்களுடன் சிக்கலானதாகவும், விரிவானதாகவும் தங்க பழுப்பு நிற கவசத்தை அணிந்த மோகன்லால், ஒரு புராண போர் வீரன் - ராஜாவாக கம்பீரமாக நிற்கிறார். அவரது அலைபாயும் கூந்தல்- அடர்த்தியான தாடி -அற்புதமான வெள்ளை வண்ண திலகம் - அவரது கட்டளையிடும் தோற்றத்திற்கு காலத்தால் அழியாத ஆன்மீக ஈர்ப்பை வழங்குகிறது. ஒரு பெரிய வாழ்வில் அமைதியாக அமர்ந்திருக்கும் கைகளாலும் ... தீர்க்கமான பார்வையுடன் உயர்த்தப்பட்ட கண்களாலும்... அவர் அமைதியின் வலிமை, மரபு மற்றும் தெய்வீக எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். பாரம்பரிய ஆபரணங்களும், ஒரு தடித்த மூக்குத்தியும் ராஜ நாகரீக தோற்றத்தை நிறைவு செய்கின்றன. இந்த தோற்றம் - போஸ்டரை ஒரு சக்தி வாய்ந்த அறிக்கையாக மாற்றுகிறது. மேலும் இது ஒரு காவிய கதையின் மையத்தில்.. அதன் மகத்துவத்திற்காக விதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றும் வெளிப்படுத்துகிறது. 


மோகன்லால் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ''இது சிறப்பு வாய்ந்தது. என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். இத்துடன் இதற்கான காத்திருப்பு நிறைவடைகிறது. ‌ பெருமிதத்துடனும், ஆற்றலுடனும் புயல் விழித்தெழுகிறது. உங்கள் ஆன்மாவை தூண்டும் வகையிலும்.. காலத்தை எதிரொலிக்கும் வகையிலும்.. உருவானதொரு கதையான 'விருஷபா'வின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறேன்.


எனது பிறந்தநாளில் இதை வெளியிடுவது மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. உங்களது அன்பு எப்போதும் எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. # விருஷபா அக்டோபர் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது'' என பதிவிட்டிருக்கிறார்கள்.


நந்தகிஷோர் எழுதி, இயக்கி, கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் 'விருஷபா'-  அதிரடி- உணர்வு பூர்வமான டிராமா மற்றும் புராணங்களை தடையின்றி இணைத்து வழங்கும் ஒரு சினிமா அனுபவமாகும். மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் பிராந்திய மற்றும் மொழியியல் எல்லைகளைக் கடந்து எதிரொலிக்கும்... ஒரு உண்மையான கலாச்சார ரீதியாக வேரூன்றிய அனுபவத்தை வழங்கும் என்பதையும் உறுதி செய்கிறது. 


2025 அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் விருஷபா வெளியிடப்பட உள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய திரை சந்தைகளில் பாக்ஸ் ஆபீசை 'விருஷபா' அதிர வைக்க தயாராகிறது. சோபா கபூர் - ஏக்தா ஆர். கபூர் -சி கே பத்மகுமார் - வருண் மாத்தூர்-  சௌரப் மிஸ்ரா - அபிஷேக் எஸ். வியாஸ் - விஷால் குர்னானி  மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம்.. இந்திய சினிமாவில் காவிய கதை சொல்லலை மறு வரையறை செய்வதாக உறுதியளிக்கிறது. 


வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள் - உணர்வுபூர்வமான காட்சிகள் - பெரிய அளவிலான போர் காட்சிகள் - மறக்க இயலாத நிகழ்ச்சிகளுடன் தயாராகும் 'விருஷபா'- ஒரு நீடித்த தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மோகன்லாலை மையமாகக் கொண்டு இதயங்களை கவரும் வகையிலும் உலகெங்கிலும் உள்ள திரைகளை ஆள்வதற்கான.. ஒரு காவியத்திற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 


எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி அன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய நிகழ்விற்கான கவுண்ட் டவுன் இன்றிலிருந்து தொடங்குகிறது.

No comments:

Post a Comment