Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Friday, 30 May 2025

Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட

 Ref: TFAPA/1134/2025    

நாள்: 30-05-2025

 

*Local Authorities Entertainment Tax (LBET) வரியை குறைத்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், திரு.M.K. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் சினிமாவின் நன்றிகள்.*



தமிழ் சினிமா துறையில் திரைப்படங்களின் வெற்றிகள் 8 சதவீதமாக குறைந்து ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. இத்தகைய காலகட்டத்தில்,  சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு  ஏற்கனவே 18 சதவீதம் ஜிஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், Local Authorities Entertainment Tax (LBET) என்று 8 சதவீத வரி, 2017 முதல், கடந்த 8 வருடங்களாக தமிழ் நாட்டில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களின் கோரிக்கையை மனதில் கொண்டு, இன்று இந்த Local Authorities Entertainment Tax-ஐ தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் மாண்புமிகு     திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு M.P. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ் சினிமா சார்பிலும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.



நன்றியுடன்,

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் சார்பில்,

 

 

T.G. தியாகராஜன் 

செயல் தலைவர்


T. சிவா                                                

பொதுச் செயலாளர்                            



G. தனஞ்ஜெயன்      

பொருளாளர்

No comments:

Post a Comment