*லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் 'பிரமயுகம்'!*
நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான 'பிரமயுகம்' (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது.
இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 - பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும்.
ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய 'பிரமயுகம்' திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது.
‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு, கிறிஸ்டோ சேவியர் இசை, ஜோதிஷ் சங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு, ஜெயதேவன் சக்கடத் ஒலி வடிவமைப்பு, எம்.ஆர். ராஜகிருஷ்ணன் ஒலி கலவை, டி.டி. ராமகிருஷ்ணன் வசனம், ரோனெக்ஸ் சேவியர் மற்றும் ஜார்ஜ் எஸ். ஒப்பனை, பிரீத்திஷீல் சிங் டி'சோசா புரோஸ்தெடிக்ஸ் மற்றும் மெல்வி ஜெ ஆடை வடிவமைப்பையும் கவனித்துக் கொண்டனர்.
*பிரமயுகம் பற்றி:*
ராகுல் சதாசிவன் எழுதி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் 'பிரமயுகம்'. ஹாரர்- த்ரில்லர் படங்களை தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் முதல் தயாரிப்பு இந்தப் படம். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தை வழங்கியது.
'பிரமயுகம்' படத்தின் இயக்குநர் மற்றும் அதே அணியினரோடு நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் தனது இரண்டாவது படமாக பிரணவ் மோகன்லால் நடிப்பில் அக்டோபர் 31, 2025 அன்று வெளியான 'டைஸ் ஐரே' என்ற படத்தை தயாரித்தது.
*தி அகாடெமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் பற்றி:*
கலை, அறிவியல் மற்றும் திரைக்கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மியூசியம் இந்த அகாடெமி மியூசியம். இந்த அகாடெமியில் கண்காட்சிகள், திரையிடல்கள், நிகழ்ச்சிகள், புதிய முயற்சிகள் மற்றும் கலெக்ஷன்ஸ் மூலம் சினிமாவைப் புரிந்துகொள்வது, கொண்டாடுவது மற்றும் பாதுகாப்பதை மேம்படுத்துகிறது. பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோவால் வடிவமைக்கப்பட்ட இந்த அகாடெமியின் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்டு புத்துயிர் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சபான் கட்டிடம் (முன்னர் மே கம்பெனி கட்டிடம் (1939) அழைக்கப்பட்டது) உள்ளது.
இந்த கட்டிடங்களில் ஒன்றாக, 50,000 சதுர அடி கண்காட்சி இடங்கள், இரண்டு அதிநவீன தியேட்டர்கள், ஷெர்லி டெம்பிள் எஷூகேஷன் ஸ்டுடியோ மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாகவும் திறந்திருக்கும் அழகான பொது இடங்கள் உள்ளன. இவற்றில் வால்ட் டிஸ்னி கம்பெனி பியாஸ்ஸா மற்றும் ஸ்பீல்பெர்க் ஃபேமிலி கேலரி, அகாடமி மியூசியம் ஸ்டோர் மற்றும் ஃபான்னி உணவகம் மற்றும் கஃபே ஆகியவற்றைக் கொண்ட சிட்னி போய்ட்டியர் கிராண்ட் லாபி ஆகியவை அடங்கும். அகாடமி மியூசியம் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
அடுத்தடுத்த அப்டேட் மற்றும் அறிவிப்புகளுக்கு இன்ஸ்டாகிராம், எக்ஸ், த்ரெட்ஸ், முகநூல் மற்றும் யூடியூபில் @allnightshifts -ஐ பின்தொடருங்கள்!
🔗 https://linktr.ee/allnightshifts
#NightShiftStudios #Bramayugam #DiesIrae


No comments:
Post a Comment