*அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்*
“45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி மர்மமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா அந்த இடத்துக்குச் செல்கிறார்கள்.
இந்த பாடலுக்கான வரிகள் மற்றும் பாடல் குரல் தமிழ் கானா கலைஞர் கானா காதர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. உற்சாகமான காட்சிகளுடன் இணைந்த ஜானி மாஸ்டர் (Jaani Master) அவர்களின் மின்னல் நடன அமைப்புகள் திரையில் மயக்கும் ஆற்றலை அளிக்கின்றன. சிவராஜ்குமார், உபேந்திரா, மற்றும் ராஜ் பி ஷெட்டியின் அபாரமான திரை முன்னிலை மற்றும் உற்சாகமான ஆட்டம் பாடலை இன்னும் உயர்த்துகிறது.
இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, இன்றைய இளைய தலைமுறையுடன் ஒத்திசைவாகச் செல்லும் தனித்துவமான, அடிமைபடுத்தும் ரிதமுடன் கூடிய இசையை வழங்கியுள்ளார்.
“45 தி மூவி” படத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன, படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
நடிப்பு: சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர்
தொழில்நுட்ப குழு:
தயாரிப்பு நிறுவனம்: சுரஜ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி
கதை, இசை, இயக்கம்: அர்ஜுன் ஜன்யா
ஒளிப்பதிவாளர்: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே. எம். பிரகாஷ்
பாடகர்: கானா காதர்
பாடல் வரிகள்: கானா காதர்
ஸ்டண்ட் மாஸ்டர்கள்: டாக்டர் கே. ரவி வர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃபரென்ட் டேனி, சேதன் டி’சூசா
நடன அமைப்பாளர்: ஜானை பாஷா
உரையாடல்: அனில் குமார்
பிஆர்ஓ: சதீஷ் (AIM)
Song Link 🔗 https://youtu.be/FZNHXXwL0CE

No comments:
Post a Comment