Featured post

மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத்

 மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட்  பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!  1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெ...

Friday, 14 November 2025

Behindwoods புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும்

 *Behindwoods புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்*





Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.


Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த இணைப்பைப் பற்றி பேசும் போது, *லஹரி மியூசிக் நிறுவனர் திரு. மனோஹரன் நாயுடு* கூறுகையில்: “இது எங்களின் 50வது ஆண்டு; 'மூன்வாக்' படத்தின் இசை உரிமையை பெற்று இப்படத்துடன் இணைவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மூன்வாக் படத்தின் பாடல்கள் உண்மையாகவே அந்தப்படத்தின் இதயத் துடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய இந்த அசாதாரணமான பாடல்கள் உலகின் எல்லா மூலையிலும் தகுந்த தரத்துடன் சேரும் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.


நான் இப்படத்தின் 5 பாடல்களையும் கேட்டுள்ளேன், அவை அனைத்தும் தனித்தன்மை கொண்டவை மற்றும் வித்தியாசமானவை. மனோஜ் NS அவர்களின் நேர்மையான முயற்சி மற்றும் கடின உழைப்பைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு சிறந்த Blockbuster Album ஆகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.”


*Behindwoods Founder & CEO மற்றும் இப்படத்தின் இயக்குனர் திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன்* கூறுகையில்: “தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் கொண்டாடப்படும் இசை நிறுவனங்களில் ஒன்றான லஹரி மியூசிக், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முதல் ஆல்பமான ரோஜா-வை வெளியிட்ட பெருமை பெற்றது. அந்த படம் இந்திய இசை உலகில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. பிரபுதேவா அவர்கள் நடித்த படங்களிலும் லஹரி மியூசிக் பல பிரபலமான ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது.


தென்னிந்திய படங்களுக்கான லஹரியின் சக்திவாய்ந்த Distribution Network மற்றும் இசை விளம்பரத்தில் உள்ள ஆழமான அனுபவம் 'மூன்வாக்' படத்திற்கு மிகப்பெரிய வலிமையாக இருக்கும். Behindwoods மற்றும் லஹரி மியூசிக் இணைப்பு, இந்தப் படத்தின் இசையை பல மொழிகளிலும் பல்வேறு தளங்களிலும் அதிகப்படுத்தும். லஹரி மியூசிக் முன்பு ஜென்டில்மேன் மற்றும் காதலன் (தெலுங்கு பதிப்பு ப்ரேமிகுடு) போன்ற மைல்கல் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளது. இவ்விருவரும் இணையும் இது மூன்றாவது மிகப்பெரிய முயற்சி”.


மூன்வாக் படத்தில் பிரபுதேவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அஷோகன், சதிஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.


ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.


தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'மூன்வாக்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு, 2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.


*Storm – The Moonwalk’s Anthem,* ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்திருக்கும் முதல் பாடல் வீடியோ தமிழ் ராப் இசைகலைஞர் அறிவு பாடிய ராப்புடன் வரும் நவம்பர் 19, புதன்கிழமை அன்று, லஹரி மியூசிக் மற்றும் Behindwoods டிவி யூடியூப் சேனல்களில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பழைய நினைவுகளைத் தூண்டும் உற்சாகத்தை வழங்கும்.

No comments:

Post a Comment