Featured post

மாஸ்க் பட டைட்டில் என்னுடையது, என்னை முழுதாக ஏமாற்றி விட்டார்கள் - குமுறும் இயக்குநர் மாரிஸா !!

 மாஸ்க் பட டைட்டில் என்னுடையது, என்னை முழுதாக ஏமாற்றி விட்டார்கள் - குமுறும்  இயக்குநர் மாரிஸா !!  Z Fims சார்பில்,   C புதுகை  மாரிஸா எழுதி...

Saturday, 15 November 2025

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்

 *இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!*



தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்.  


மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.


அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 


படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய போராடும்போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும். எங்கள் படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குநர்கள் வெங்கட் பிரபு சார், ராஜு முருகன் சார் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.


சென்னையில் 35 நாட்களில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த கதை சென்னை நகரத்தின் இயல்பு, அதன் நகைச்சுவை, பரபரப்பு மற்றும் இதயத் துடிப்பைப் படம்பிடித்து காட்டுகிறது. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்த இந்தப் படத்தில், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களை பிரதிபலிக்கும் நான்கு பாடல்களைக் கொண்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், வைஷாக், ஆண்டனி தாசன், தீப்தி சுரேஷ் மற்றும் கானா பாலா ஆகியோர் தங்கள் குரல்களால் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர். 


தி மாபோகோஸ் கம்பெனி பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் நவீனத்துவம், பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவையுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள இளம் திறமையாளர்களைக் கொண்ட படம். 


*நடிகர்கள்:*

சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, வி.ஜே. மகேஸ்வரி, சாணக்கியன், வி.ஜே. பார்வதி, லிவிங்ஸ்டன், ஜாவா சுந்தரேசன், சூப்பர் சுப்ரமணி, தீப்ஸ், உமா பத்மநாபன், ரத்னா (சன் நியூஸ்), வினோத் முன்னா, ரயில் ரவி, ரோஷன், விபிதா தெக்கேபட், சங்கீதா ராஜு, மஹிமா, மாதுரி வாட்ஸ், மிருதுளா சுரேஷ்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:* 


பேனர் - தி மாபோகோஸ் கம்பெனி,

எழுத்து, இயக்கம் - பிரவீன் சரவணன்,

தயாரிப்பாளர் - பிரதீப் மகாதேவன்,

இசையமைப்பாளர் - எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்,

ஒளிப்பதிவாளர் - கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ,

எடிட்டர் - தினேஷ் பொன்ராஜ்,

கலை இயக்குநர் - எஸ். மதன் குமார்,

நடன இயக்குநர் – அசார்,

விஎஃப்எக்ஸ் - செல்வதாசன் (ரேமேக்ஸ் ஸ்டுடியோஸ்),

கதை - ஷம்மீர் சுல்தான்,

ஆடை வடிவமைப்பாளர் - ப்ரீத்தி சிங் (Au லினன்),

தலைமை இணை இயக்குநர் - இ. தாமுதரன்,

இணை இயக்குநர் – எஸ்.சூரிய பிரகாஷ்,

காஸ்ட்யூமர் - கே.கே. தன்ராஜ்,

படங்கள்– அன்பு,

ஒப்பனை - மணி சீராளன்,

பாடல் வரிகள் - நவீன் பாரதி,

ஒலிக்கலவை - ராம்ஜி சோமா,

டப்பிங் - லியோ தாஸ் (சவுண்ட்ஸ் ரைட்ஸ்),

எஸ்எஃப்எக்ஸ் – சண்முகம், எஸ். நிஷோக்,

கலரிஸ்ட் - ஜி. பாலாஜி,

பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – பெனு நந்தா,

விளம்பர வடிவமைப்பாளர் - போஸ்டர் காரன்,

தயாரிப்பு நிர்வாகி - விஜயகுமார் சண்முகம்,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் - வி.கே. ஸ்ரீஜித்,

நிர்வாக தயாரிப்பாளர் - பி.எஸ். வினோத் செல்லையா,

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - பிரவீன் சரவணன்,

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர், 

ஆடியோ ஆன் – சரிகம.

No comments:

Post a Comment