Featured post

“Aaryan” Film Thanksgiving Meet!!

 “Aaryan” Film Thanksgiving Meet!! Under the banner of Vishnu Vishal Studios, the investigative thriller “Aaryan”, presented by Shubhra ...

Wednesday, 5 November 2025

டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் 'தி டிரெய்னர்' -

 டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் 'தி டிரெய்னர்' - 'காவலன்' செயலியால் ஈர்க்கப்பட்ட அதிரடி த்ரில்லர்!




திரைப்பட ஆர்வலர்களிடையே த்ரில்லர் படங்களுக்கான வரவேற்பு எப்போதும் குறைவதில்லை. இந்த த்ரில்லர் படங்களுக்கு விறுவிறுப்பான திரைக்கதையும் திறமையான நடிகர்களின் நடிப்பும் அதிக ஆர்வம் சேர்க்கிறது. அந்த வகையில், டிரான்ஸ்இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ் நீலா தயாரிப்பில் பி. வேல்மாணிக்கம் இயக்கத்தில் ஹீரோவாக ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடித்த 'தி டிரெய்னர்' திரைப்படம் த்ரில்லர் அக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. 

பிரின்ஸ் சால்வின் இளம்வயது  ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்


படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் வெளிவரும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 


படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் 'லீ' என்ற நாயும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. காவல்துறை அதிகாரியாக நடிகர் ஷ்யாம் நடித்திருக்கிறார். 


பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு காவல் துறை உருவாக்கிய ‘காவலன்’ செயலியிலிருந்து உத்வேகம் பெற்று சமூகப் பொறுப்புள்ள படமாக இது உருவாகியுள்ளது. 


அக்குபஞ்சர் மருத்துவராக ஜூனியர் எம் . ஜி. ஆர் வில்லன் கதாபாத்திரதில் நடித்து இடுக்கிறார், அவரின் செல்வாக்கின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு மர்ம கும்பலைச் சுற்றி கதை சுழல்கிறது. வியர்வையின் மூலம் மக்களை அடையாளம் காணும் தனித்துவமான சக்தியைப் பெற்ற ஸ்ரீகாந்த், ஒரு அனாதை இல்லத்தை கவனித்துக்கொள்கிறார். போலீஸ் அதிகாரி ஷாம் தலைமையிலான விசாரணையில் அவர் சிக்கிக் கொள்கிறார். ஷாம்  அவரை குற்றவாளி என்று தவறாக நினைக்கிறார். தான் நேசிக்கும் பெண்ணை மர்ம கும்பல் குறிவைக்கும்போது,  ஸ்ரீகாந்த் உண்மையை அம்பலப்படுத்தவும், தனது அனாதை இல்லத்தைப் பாதுகாக்கவும், தனது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கவும் போராடுகிறார். கதைக்கு வலுவான மற்றும் உணர்ச்சிபூர்வமான கிளைமாக்ஸ் இருக்கும். 


படத்தில் எட்டு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது. ஸ்ரீகாந்த், ஷாம் இருவரும் போட்டிபோட்டு ஆக்ஷன் கட்சிகளில் மிரட்டிருக்கிறார்கள் அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்திருக்க, கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்.  நிரஞ்சன் ஆண்டனி படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக படத்தின் தயாரிப்பு பணிகளை பிரபாகரன் சிறப்பாக செரப்பாக செய்துருக்கிறார் , அஞ்சனா க்ருத்தி, புஜிதா பொன்னாட  இருவரும் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்கள், வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே.ஆர்.எம்.ராஜ் மோகன் , பிரியங்கா ராய், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் சமூக பொறுப்புள்ள படமாக உருவாகியுள்ள இந்தக் கதை அர்த்தப்பூர்வமாகவும் பார்வையாளர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட்டகாவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment