Featured post

Cristina Kathirvelan Movie Review

Cristina Kathirvelan Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம chrisitna kathirvelan படத்தோட review அ தான் பாக்க போறோம். கௌஷிக், பிரதிபா, அருள...

Saturday, 8 November 2025

பகல்கனவு திரைப்படம் திரைவிமர்சனம் இயக்குநர் பைசல்ராஜ் இயக்கத்தில்

பகல்கனவு  திரைப்படம் திரைவிமர்சனம் 

இயக்குநர் பைசல்ராஜ் இயக்கத்தில்




பைசல்ராஜ், ஆதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பகல் கனவு. 

கதை

கைடு திருமலையை தேடி வரும் யூ டியூப்பர் பைசல் ராஜ், ஷகிலாவின் ஆட்களால் தாக்கப்படுகிறார்.அதை பார்த்த கூல்சுரேஷ் அவர்களிடம் இருந்து பைசல்ராஜை காப்பாற்றுகிறார்.உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்று கேட்க.,பைசல்ராஜ் தன் நண்பன் கராத்தே ராஜன்,காதலி அதிரா சந்தோஷ் உதவியுடன் யூ டியூப் சேனல் நடத்துகிறேன் என்று சொல்கிறார்.அந்த சேனலுக்கு வித்தியாசமான இடங்களை தேடி வரும் பைசல் ராஜ்,கராத்தே ராஜனுக்கும்  ஷகிலா கள்ளச்சாராயம் காய்சுவது தெரிய வருகிறது. கராத்தே ராஜன் அந்த சாராயத்தை குடித்ததால் பாதிப்படைகிறார். இதனால் கோபமான பைசல் ராஜ், ஷகிலா பற்றி போலீஸில் சொல்கிறார். போலீஸ் ஷகிலாவையும் அவள் ஆட்களையும் கைது செய்கிறது. பைசல் ராஜ் தனது கண்டெண்ட் வைரலாக மந்திரவாதி உதவியுடன் அதிராவிற்கு பேய் பிடித்ததை ஓட்டியதாக ஒரு பதிவு போடுகிறார். அதை பார்த்த போட்டி யூ டியூப்பர்   அந்த பதிவு பொய் என்று அவரும் பொய்யாக மறுப்பு தெரிவித்து பதிவு போடுகிறார். இதனால் பாதிப்படைந்த பைசல் ராஜ் பேய் வீடு பற்றி கண்டெண்ட் போட முடிவு செய்கிறார்.அதற்கு தனியாக இருக்கும் வீட்டை தேடி கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் காவலாளியை கரெக்ட் செய்து அதிரா சந்தோஷை பேயாக நடிக்க வைத்து கன்டெண்ட் போடுகிறார். அதை பார்த்த வீட்டு உரிமையாளர் அது பொய் என்று பேட்டி கொடுக்கிறார். இது அதிரா சந்தோஷின் குடும்பத்திற்கு தெரிய வர  , அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்கின்றனர். கராத்தே ராஜனும் தனது லீவு முடிந்து விட்டது நானும் வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்.  பைசல் ராஜ்  ,உண்மையாகவே பேய் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று கூல் சுரேஷிடம் சொல்கிறார். அதற்கு கூல் சுரேஷ் பேய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக சொல்கிறார்.   இருவரும் பேய் இருக்கும் இடத்திற்கு சென்றார்களா...? பேய் பார்த்தார்களா என்பதே மீதி கதை.


கதாநாயகனாக பைசல்ராஜ் சிறப்பாக நடித்துள்ளார். அதிரா சந்தோஷ், கிரிஷ்நந்து, ஷகிலா, கூல்சுரேஷ், கராத்தே ராஜா, விமல்ராஜ் என இதில்  நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜாய் ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சுரேஷ் நந்தனின் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது.   பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது


இயக்குநர் பைசல்ராஜ்

யூ டியூப்பர்களின் பித்தலாட்டங்களை சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment