Kumki 2 Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kumki 2 nd part படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணிருக்கறது prabhu solomon . இந்த படத்துல arjun das , shrita rao , mathiyazhagan , hareesh paredi , suzane george , srinath , nadackal unnikrishanan , thiruselvam னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
சின்ன வயசு bhoomi யா நடிச்சிருக்க மதியழகனுக்கு ஒரு குட்டி யானை கிடைக்கும். இந்த குட்டி யானையோட பேரு nila . இவங்க ரெண்டு பேரும் ரொம்ப close அ இருக்காங்க. நல்ல best friends யும் ஆயிடுறாங்க. இப்போ பல வருஷங்கள் ஓடி போயிடுது. இப்போ bhoomi யும் வளந்து college க்கு படிக்க போயிடுவான். இவனோட அம்மா susan க்கு குடிப்பழக்கம் இருக்கும். இவங்களுக்கு தன்னோட பையன்க்கு குட்டி யானை கிடைச்சிருக்கு னு தெரிய வரவும் ரொம்ப சந்தோசமா ஏத்துக்குறாங்க. இதுக்கு காரணம் இந்த குட்டி பெருசா வளந்ததுக்கு அப்புறம் பெரிய லாபத்துக்கு வித்தடனும் னு plan பண்ணி நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்க. இப்போ bhoomi யும் college க்கு போன பின்ன இந்த யானையை நல்ல விலைக்கு ஒரு யானைப்பாகனுக்கு வித்துடுறாங்க suzane . விவசாய எடத்துல தொம்சம் பண்ணுற யானையை விரட்டுறதுக்கு தான் இந்த யானையை அந்த பாகன் யும் வாங்கிருப்பான். யானையை அம்மா வித்துட்டாங்க னு தெறிய வரவும் bhoomi யும் அவனோட friend khalis அ நடிச்சிருக்க andrews யும் nila வை தேடி போறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல இவங்க nila வையும் கண்டு பிடிச்சிடுறாங்க. இவங்க மூணு பேரும் அங்க இருந்து தப்பிச்சிடுறாங்க, ஆனா இவங்கள பிடிக்கறதுக்காக chiefminister க்கு கீழ வேலைபாத்துட்டு இருக்கற paari யா நடிச்சிருக்க arjun das தொறத்திட்டு வாரான். இதுக்கு காரணம் இந்த யானையை ஒரு நல்ல நாள் ல பலி குடுக்கணும் னு chiefminister plan பண்ணி வச்சுருப்பாரு. இப்போ இந்த paari கிட்ட இருந்து இவங்க மூணு பேரும் தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்துல இருக்கற எல்லா scenes யும் பக்கவா connect ஆகி ஒரு அழகான கதையை குடுத்திருக்காங்க. படத்துல வர ஓவுவுறு characters க்கும் நல்ல detailing அ குடுத்திருக்காங்க. ஒரு பக்கம் bhoomi ஓட friend khalis ஓட காமெடி, இன்னொரு பக்கம் இந்த காட்டுக்குள்ள anali ன்ற sound engineer வருவாங்க. அவங்களுக்கு assitant அ ஒருத்தன் வருவான். அவனோட comedy இன்னொரு பக்கம் னு இந்த படத்துல balanced ஆனா comedy scenes அ வச்சுருக்காங்க. அதுமட்டுமில்ல யானைகளை பாதுகாக்குறது எவ்ளோ முக்கியம் னு இந்த படத்துல சொல்லிருக்காங்க. படத்தோட ஆரம்பத்துல யானை க்கும் ஹீரோ க்கும் நடுவுல இருக்கற அந்த நட்பா காமிச்சா விதம் எல்லாமே super அ இருந்தது.
ஒரு சில எடத்துல logic இல்லாத மாதிரி இருக்கும். அதாவுது இந்த யானை குட்டி ல இருந்து வளர வரைக்கும் எந்த ஒரு officers யும் வந்து check பண்ண மாட்டாங்க. அதோட இந்த யானைக்கான license யும் bhoomi எடுத்துருக்கமாட்டான். இதெல்லாம் கொஞ்சம் correct பண்ணி இருந்தாங்க னா இந்த படம் இன்னுமே நல்ல இருந்திருக்கும். அதே மாதிரி ஒரு சில எடத்துல serious அ animals ஓட abuse அ பத்தி பேசிட்டு இருக்கும்போது திடுருனு comedy scenes எல்லாம் வரும். இதை avoid பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும்.
இந்த படத்துல நெறய real ஆனா elephants அ use பண்ணிருக்காங்க. நெறய scenes அ இதுக்காகவே thailand ல தான் shoot பண்ணிருக்காங்க. sukumar ஓட cinematography யும் super அ இருந்தது. யானைகளை காமிக்க்ர விதமா இருக்கட்டும் இல்லனா காட்டோட அழகை காமிக்க்ர விதமா இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. nivas prasanna ஓட music and bgm இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம்.

No comments:
Post a Comment