Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Monday, 3 November 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

 Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!


Verus Productions தயாரிப்பில், கெளதம் ராம் கார்த்திக் நடித்துவரும் “ROOT – Running Out of Time” திரைப்படத்தின் படப்பிடிப்பு  அக்டோபர் 30, அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.


Sci-Fi க்ரைம் த்ரில்லரான இப்படம், சிறந்த தயாரிப்பு நிர்வாகத்தால், திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


“ROOT – Running Out of Time” படத்தை சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ளார். இதன் மூலம் பாலிவுட் நடிகர் அபர்ஷக்தி குரானா தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படத்தில் பாவ்யா த்ரிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும், Y.Gee. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.


உணர்ச்சிமிகுந்த கதாபாத்திரங்களோடு, அறிவியலையும் மனித உணர்வுகளையும் இணைக்கும் தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டது.


இயக்குநர் சூரியபிரதாப் கூறியதாவது,


“ROOT படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. இந்தப் படம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு பயணம். எங்கள் உழைப்பையும், அர்ப்பணிப்பையும், முழுமையாக கொடுத்து ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை உருவாக்கியுள்ளோம். அதை விரைவில் பார்வையாளர்களுடன் பகிர்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.


எங்கள் ஹீரோ கெளதம் ராம் கார்த்திக் அவர்களுக்கு என் இதயபூர்வ நன்றி. அவரின் ஆற்றல், அர்ப்பணிப்பு, உழைப்பு அனைத்தும் இந்தப் பயணத்தை சிறப்பாக மாற்றியது. இந்த திரைப்பட உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கும், பக்கபலமாக இருந்த நடிகர்கள்,தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றிகள், மேலும் பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா அவர்களின் பங்களிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருந்தது. அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!


இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. விரைவில் ROOT ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.”


தொழில்நுட்பக் குழு:


ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா 

படத் தொகுப்பு: ஜான் அபிரகாம்

இசை: விதூஷனன் 

தலைமை நிர்வாக அதிகாரி: Dr. ஆலிஸ் ஏஞ்சல்

தயாரிப்பு வடிவமைப்பு: தினேஷ்

ஆக்‌ஷன் இயக்கம்: மிரக்கிள் மைக்கேல்

ஆடை வடிவமைப்பு: தீப்தி ஆர்.ஜே

VFX : சாந்தகுமார் (Hocus Pocus Studios)

தயாரிப்பு மேலாளர்: தனலிங்கம்

PRO: ரேகா

No comments:

Post a Comment