Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Thursday, 8 June 2023

இந்திய பெருங்கடல் வர்த்தக சங்கத்தின் ஆணையர் வடமலை சுபாஷ்

 *இந்திய பெருங்கடல் வர்த்தக சங்கத்தின் ஆணையர் வடமலை சுபாஷ் ஏற்பாட்டில் காலநிலை மாற்றத்திற்கான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.*


சென்னை தியாராயநகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியாவிற்கான  ஜமைக்கா துணை தூதர் ஜேசன் ஹால், லெசோதோ ராஜ்ஜிய துணை தூதர் தபங் லினஸ் கொலுமோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றம் இந்திய பெருங்கடல் பாதுகாப்பிற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் இதிலிருந்து மீள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வர்த்தக ஆணையர் வடமலை சுபாஷ் எடுத்துரைத்தார். பனிப்பாறைகள் உருகுவதால் இந்தோ பசிபிக் பகுதியில் பேரழிவு தரும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்பதையும் இந்த பகுதியில் உள்ள தீவுகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்த்தினார். இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு உடனடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் உணர்த்தினார். சிறப்பான விழிப்புணர்வு ஏற்படுத்திய அவருக்கு ஜமைக்கா துணை தூதர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 


இந்திய பெருங்கடல் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆசிப் இஃபால் காலநிலை மாற்றம் லசோதோ ராஜ்ஜியத்தில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இதன் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் அது மற்ற நாடுகளில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். 


இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மற்றும் ஏற்கனவே உலக நாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டது.

No comments:

Post a Comment