வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ செல்அம் எழுதி இயக்குகிறார்.
தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கும் படம் “ மஞ்சள் வீரன் “
இந்த படத்தில் 2K கிட்ஸின் நிஜ கதாநாயகன் பிரபல வைரல் யூடுயுபர் TT.F.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார்
ஒளிப்பதிவு கொளஞ்சி குமார்
ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.
கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – செல்அம்
(இவர் ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது மஞ்சள் வீரன்.
ஜூலை மாதம் இறுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
TT.F வாசனின் பிறந்தநாளான நேற்று “ மஞ்சள் வீரன் “ படத்தின் பூஜையும் மற்றும் FRIST LOOK வெளியீடும் நடைபெற்றது.
No comments:
Post a Comment