Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Sunday 18 June 2023

எஸ் பி சினிமாஸ் சார்பில் சங்கர் மற்றும் கிஷோர் வெளியிடும் படம் பாயும் ஒளி நீ எனக்கு

 *எஸ் பி சினிமாஸ் சார்பில் சங்கர் மற்றும் கிஷோர் வெளியிடும் படம் பாயும் ஒளி நீ எனக்கு*

*கே எம் எச்  புரடக் ஷன் சார்பில்  கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் "பாயும் ஒளி நீ எனக்கு". இதில் விக்ரம்பிரபு, வாணி போஜன் ஜோடியாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இசை அமைக்கிறார். எஸ் பி சினிமாஸ் சங்கர் கிஷோர் வெளியிடுகிறார்.*









*பாயும் ஒளி நீ எனக்கு" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது*


*இதில் கிஷோர் பேசியதாவது:*


பாயும் ஒளி நீ எனக்கு  படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. அதற்கு பட இயக்குனர் கார்த்திக் அத்வைத், ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு முதலில் நன்றி சொல்கிறேன். இவர்கள் இப்படத்தை வெளியிட  ஒரு வாய்ப்பு கொடுத் திருக்கிறார்கள். இந்த படம் பெரிய திரையில் விரைவில் திரைக்கு வருகிறது. உங்கள் அனைவரின் ஆதரவு தர வேண்டும் நன்றி.


*பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது:*


அன்பு,  சுடர் போல் எரிய வேண்டும் அதுதான் பாயும் ஒளி நீ எனக்கு. இது பாரதியார் வரி. சுடர் போல் இந்த படம் மேல் நோக்கி போகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. படம் பார்க்கும்போது அன்பு நமக்குள் ஊறி பெருகும்.  அந்த அன்பை மற்றவர்களுக்கு

கடத்துவோம்.


*ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர்  பேசியதாவது:*


நல்ல படங்களுக்கு ஆதரவு தரும் பத்திரி கையாளர்களுக்கு வணக்கம். இந்த படத்தில் என்னுடன் 3 அசிஸ்டன்ட்ஸ்கள்  மட்டுமே பணியாற்றினார்கள். அவர்களுக்கு முதலில் நன்றி. ஏனென்றால் இதுவொரு மிகப் பெரிய ஆக் ஷன் படம். இதன் 70 சதவீத படப்பிடிப்பு இரவில்தான் நடக்கும். பெரிய ஆக் ஷன் படம் என்பதால் நிறைய கேமரா, எக்கியூப் மென்ட்ஸ் பயன்படுத்தப்பட்டது அதற்கு ஒரு வலுவான டீம் தேவைப்பட்டது. அப்படி எனக்கு வலுவான என் உதவியாளர்கள் இருந்தார்கள். அடுத்து இயக்குனர் கார்த்திக், கேமரா மேனுக்கென்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் தான் இந்த படம்.  பார்வை குறைபாடுள்ள ஒருவனின் உலகம் எப்படியிருக்கும் என்பதை காட்ட இப்படம் எனக்கொரு வாய்ப் பாகபும்,  சவாலாகவும்  இருந்தது. விக்ரம் பிரபு, வாணி போஜன் மற்ற எல்லா நடிகர்களுமே ரொம்பவும் சின்சியர். மேக்கப் அணிந்து சரியான நேரத்துக்கு  வந்துவிடுவார்கள். கடைசி 10 நாள் 180 மணிநேரம்  நடிப்பது என்பது பெரிய விஷயம். விக்ரம்பிரபு காட்டிய இந்த ஈடுபாடுதான் எங்களையும் தொடர்ச் சியாக பணியாற்ற வைத்தது.  இந்த படத்தில் சண்டை காட்சி 40 நாட்கள் படமாக்கப் பட்டது. விக்ரம் பிரபு நடித்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி கண்ணாடிகள் நடுவில் படமாக்கப்பட்டது. அது பெரிய ஹேலைட்டாக  இருக்கும்.


*எடிட்டர் சி.எஸ். பிரேம்குமார் பேசியதாவது:*


விக்ரம் பிரபு அருமையாக நடித்திருக்கிறார். இசை, சண்டைக்காட்சி, பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


*ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி பேசிய தாவது:*


விக்ரம் பிரபு சாருடன்  நிறைய படங்கள் பைட்டராக  நடித்திருக்கி றேன் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளேன். முதல் படத்திலேயே 40 நாட்கள் சண்டை காட்சி. கண் தெரியாதவர்கள்  போடும் சண்டை காட்சி போல் விக்ரம் பிரபு நடிக்க வேண்டும் . இதற்காக கவனமாக சண்டை காட்சிகள் படமாக்க வேண்டியி ருந்தது. எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. கடுமையாக விக்ரம்பிரபு சார் நடித்திருக்கிறார் . படம் நன்றாக வந்திருக்கிறது படத்துக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க நன்றி.


*நடிகை வாணி போஜன் பேசியதாவது:*


இந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது.   விக்ரம்பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்று ரெம்ப நாள் ஆசை.இந்த படத்தில் விக்ரம் ஆக்டிங், ஆக் ஷன் எல்லாமே பிடித்திருந்தது. என்னையும் ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. எல்லோரும் சப்போர்ட் பண்ண கேட்டுகொள் கிறேன்.


*விக்ரம் பிரபு பேசிய தாவது:*


இந்தவொரு நல்ல டீமோடு நிறைய ஹார்டு ஒர்க் செய்தது ரொம்ப சந்தோசம். இயக்குநர் கார்த்திக் ரொம்பவும் சினிமாவில் ஆர்வம் உள்ளவர். அவருடன் பயணம் தொடங்கி நீண்டநாள் சென்றது.  இந்த படத்தில் எவ்வளவோ பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் புரிந்து கொண்டு பணியாற்றினார். அவர் பேச்சிலேயே அது தெரிந்திருக்கும். இந்த பட அனுபவம் என்றைக்கும்  மறக்காது அப்படிப்பட்ட படம் இது.

இன்று இயக்குனர் கார்த்திக் சொன்ன ஒரு விஷயம்தான் அதாவது கண்ணுக்கு தெரியற ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது,  கண்ணுக்கு தெரியாத விஷயம் தப்பாகவும் இருக்காது என்ற ஒரு அழகான விஷயத்தை வைத்துதான் இந்த ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. இந்த படத்தில் வாணி போஜன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கன்னட ஹீரோ தனஞ்ஜெயாவும் ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு நடித்துக்  கொடுத்திருக்கிறார்.   இந்த படம் நன்றாக  வந்திருக்கிறது. தியேட்டரில் நல்ல அனுபவம் தரும் படமாக இருக்கும். ஸ்டண்ட்  மாஸ்டர் தினேஷ் காசி இவன் வேற மாதிரி படத்திலிருந்து நன்றாக தெரியும் . இன்றைக்கு படத்தில் மாஸ்டராக இருக்கிறார். எல்லா சண்டை காட்சி களையும் நன்றாக எடுத்திருக்கிறார். என் மனத்துக்கு நெருக்க மான படம். 

இந்த படத்தை வெளியிடும் கிஷோருக்கு நன்றி. நாங்கள் நல்ல படம் தந்திருக்கிறோம்  உங்கள்  ஆதரவு தேவை.


*இயக்குனர் கார்த்திக் அத்வைத் பேசியதாவது:*


நான் ஹைதராபாத் திலிருந்து வருகிறேன். முதன்முறையாக விக்ரம் பிரபுவை சந்தித்து கதை சொன்னபோது அவர் வியந்து கேட்டார். அதுதான் எனக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது.  ஒரு முதல் பட இயக்குனருக்கு விக்ரம்பிரபு போலவும் இந்த டீம் போலவும்  யாரும் சப்போர்ட் செய்வார்களா என்று தெரியவில்லை அதற்காக விக்ரம் பிரபுக்கும் குழுவின ருக்கும் நன்றி. நாயகி வாணி போஜனுக்கும் நன்றி. ஒளிப்பதி வாளருமக்கு எனது நன்றி. என்னுடைய எண்ணத்தை 

புரிந்துக்கொண்டு காட்சிகளை அழகாக படமாக்கினார்.  ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்கும் நன்றி

கேரக்டரை புரிந்துக் கொண்டு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தார். படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும்.  படத்தில் பணியாற்றிய எடிட்டர் சி. எஸ். பிரேம்குமார் நடன இயக்குனர் தாஸ்தா,  படத்தை ரிலீஸ் செய்யும் கிஷோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


விழாவில் பத்திரிகை தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு பிறந்த  நாளையொட்டி படக்குழு முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.


*Crew - TAMIL*


எழுத்து & இயக்குனர் - கார்த்திக் அத்வைத்

ஒளிப்பதிவாளர் - ஶ்ரீதர்

எடிட்டர் - சி.எஸ்.பிரேம்குமார்

இசை - சாகர்

கலை இயக்குனர் - பி.எல். சுபேந்தர்

சண்டை - தினேஷ் காசி

பாடல் - கார்த்திக் நேத்தா

நடனம் - தஸ்தா

சிகை அலங்காரம் - சேகர்

பிஆர்ஓ - டைமண்ட் பாபு, சதிஷ் (AIM)

புகைப்படம் - முருகதாஸ்

விளம்பர வடிவமைப்பு - REDDOT பவன்

D I வண்ணமயமானவர் - ரங்கா 

ஆடை வடிவமைப்பாளர் - டீனா

தயாரிப்பு பதாகை - கார்த்திக் மூவி ஹவுஸ்

உலகமெங்கும் வெளியீடு - எஸ் பி சினிமாஸ்

No comments:

Post a Comment