Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Saturday, 17 June 2023

VALATTY – A Tale of Tails” வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , மலையாளத்

 *“VALATTY – A Tale of Tails” வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , மலையாளத் திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை KRG Studios நிறுவனம் கைப்பற்றியது !!*


 *“VALATTY – A Tale of Tails” வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , மலையாளத் திரைப்படத்தினை KRG Studios  நிறுவனம் உலகம் முழுவதும்  வெளியிடுகிறது !!*


நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகச பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான படைப்பு. இந்த அற்புதமான  பொழுதுபோக்கு திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர்களான ரோஷன் மேத்யூ, சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நாய் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர். இந்திய சினிமாவில் முறையாக வீட்டுச் செல்லப்பிராணிகள், தங்கள் உலகிற்குள் மனிதர்களை அழைத்துச் செல்லும்  அற்புதமான நிகழ்வாகும். 





KRG Studios,  நிறுவனர் கார்த்திக் கவுடா, இத்திரைப்படம்  குறித்துக் கூறும்பொழுது.. 

புதுமையான கதைசொல்லல் மூலம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும்

இப்படத்திற்காகப் பிரபல தெலுங்கு   தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் கைகோர்த்துள்ளேன், அவர் தெலுங்கில் படத்தை வழங்கவுள்ளார், அனில் ததானி இந்தியில் படத்தை விநியோகம் செய்யவுள்ளார்.  அவர் மேலும் கூறுகிறார். Home Screen Entertainment மூலம் இப்படத்தின் வெளிநாட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இப்படம் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 


வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , திரைப்படத்தை  விஜய் பாபு வழங்குகிறார் & Friday Film House இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் தேவன் இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை 14ஆம் தேதி மலையாளத்திலும், ஒரு வாரம் கழித்து கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

 


*

No comments:

Post a Comment