Featured post

Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy

 Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore ...

Thursday, 29 June 2023

Ondraga Entertainment ஒரிஜினல்ஸின் சமீபத்திய வரவு: ’முத்த பிச்சை’

 *Ondraga Entertainment ஒரிஜினல்ஸின் சமீபத்திய வரவு: ’முத்த பிச்சை’ மனதைக் கவரும் மெலடி!*


Ondraga Entertainment பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட அடுத்த சுயாதீன பாடலின் வெளியீட்டை அறிவிப்பதில் Ondraga ஒரிஜினல்ஸ் பெருமிதம் கொள்கிறது. இந்த வசீகரிக்கும் பாடலுக்கு 'முத்த பிச்சை' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, கருத்துருவாக்கம் செய்து இயக்கியவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த பாடல் வரிகளை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். 



வெற்றிப் படமான ’பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொடுத்த சந்தோஷ் மற்றும் திறமையான ஊர்மிளா கிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பாடலில் நடித்துள்ளனர். காட்சிகள் உண்மையிலேயே கண்களைக் கவரும்படியும், இதன் பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாகவும் இதன் மெல்லிசை பாடலுக்கு உயிரூட்டுவதாகவும் அமைந்துள்ளது.


பாடலுக்கு விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்க, குமார் கங்கப்பன் கலையை கவனித்துள்ளார். இதுமட்டுமல்லாது, பிருந்தாவின் நடன அமைப்புடன் ஆண்டனியின் எடிட்டிங்  இந்தப் பாடலை மேலும் மெருகூட்டியுள்ளது. 


ஜூன் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் இசை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்த பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. பாடலின் சக்திவாய்ந்த குரல் மற்றும் நேர்த்தியான கதை சொல்லல் ஆகியவை ஒன்றாக இணைந்து பார்வையாளர்களின் உணர்ச்சிகளை ஊடுருவும் வகையில் அமைந்துள்ளது.

 

Ondraga Entertainment தரமான உள்ளடக்கத்தை தயாரிப்பது மற்றும் அதன் Ondraga ஒரிஜினல்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம் சுயாதீன இசையைத் தொடர்ந்து தயாரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வெளியீட்டின் போதும், படைப்பாற்றலின் எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் தனித்துவமான மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளைக் கொண்டுவர Ondraga சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


’முத்த பிச்சை’ பாடல் இப்போது அனைத்து முக்கிய இசை தளங்களிலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்த பாடலின் மாயாஜாலத்தை அனுபவியுங்கள் மற்றும் Ondraga  ஒரிஜினல்ஸின் மெல்லிசைகள் உங்கள் காதல் மற்றும் இசை உலகத்தின் மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லட்டும்.

No comments:

Post a Comment