Featured post

Sai Durgha Tej personally visited Amma Orphanage

 *Sai Durgha Tej personally visited Amma Orphanage to donate the promised amount* Supreme Hero Sai Durgha Tej is renowned for his compassion...

Thursday 15 June 2023

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'ஏஏஏ சினிமாஸ்' தொடக்க விழா

 *ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'ஏஏஏ சினிமாஸ்' தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!*

 

மிகப் பிரமாண்டமான முறையில் தனது ’ஏஏஏ சினிமாஸ்'ஸை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்  ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில்  திறந்து வைத்தார். அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து 'ஏஏஏ சினிமாஸ்'ஸை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது தங்களுக்குப் பிடித்த நட்சத்திரமான அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.






சுனில் நரங் கூறுகையில், ''ஏஏஏ சினிமாஸுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு மூன்று லட்சம் சதுர அடி. மூன்றாவது தளத்தில் உணவு விடுதி 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது.  ஏஏஏ சினிமாஸின் நான்காவது மாடியில் ஐந்து திரைகளுடன் கூடிய திரையரங்கு உள்ளது. திரை எண் 2 இல் LED திரை உள்ளது. தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ மட்டுமே. இதற்கு புரொஜக்‌ஷன் தேவையில்லை. ஆனால், திரையிடல் மிகவும் தெளிவாக இருப்பதோடு சிறப்பான திரை அனுபவத்தையும் தரும். 67 அடி உயரம் மற்றும் ATMOS ஒலியுடன் கூடிய பார்கோ லேசர் புரொஜெக்ஷனை ஸ்கிரீன்-1 கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய திரை இது. இங்கு ஒலியின் தரம் உலகத்தரம் வாய்ந்தது. லாபி மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்'' என்றார்.


அல்லு அரவிந்த் கூறுகையில், “’ஏஏஏ சினிமாஸ்’ உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சுனில் நரங் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளார். தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு டீம் வொர்க் மற்றும் சுனில் நரங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏஏஏ சினிமாஸை மிக பிரமாண்டமாக அமைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார்.

No comments:

Post a Comment