Featured post

Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy

 Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore ...

Wednesday, 28 June 2023

சென்னையின் பிரபல அழகுக்கலை நிபுணர் ஸ்ரீதேவி தியாகராஜன் ஒரே இடத்தில் 25 நிமிடங்களில் 493

 *சென்னையின் பிரபல அழகுக்கலை நிபுணர் ஸ்ரீதேவி தியாகராஜன் ஒரே இடத்தில் 25 நிமிடங்களில் 493 ஒப்பனை கலைஞர்களை கொண்டு மணப்பெண் அலங்காரம் செய்து உலக சாதனையாக லையனஸ் இன்டெர்னேஷனல் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.*


உலக ஒப்பனைக் கலைஞர்கள் தினத்தை ஒட்டி இந்த மாபெரும் சாதனை சென்னையில் உள்ள அமீன் மஹாலில் நடத்தப்பட்டது. 



ஸ்ரீதேவிஸ் காண்டூர் எனும் அழகு நிலையத்தின் தலைமை செயல் அதிகாரியும் அழகுக்கலை நிபுணருமான ஸ்ரீதேவி தியாகராஜன் இந்த நிகழ்ச்சியை மிகக்குறுகிய காலத்தில் திட்டமிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஒப்பனை கலைஞர்களை வரவழைத்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


 இந்த நிகழ்ச்சி லையனஸ் இன்டெர்னேஷனல் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளது. 


இது தொடர்பாக குறிப்பிட்ட ஸ்ரீதேவி தியாகராஜன், ஒரே மாதத்தில் திட்டமிட்டு இந்த சாதனையை செய்ததாகவும், இது உலகசாதனை புத்தகத்தில் இடம்பெறும் என தான் எதிர்பார்த்தாகவும் தெரிவித்தார். ஒரு மாத கடின உழைப்பிற்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு தான் தகுதி உடையவராக எண்ணுவதாகவும் அவர் தெரிவித்தார். 


இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு கே.ஆர். பியூட்டியின் தலைமை செயல் அதிகாரியும் தலைசிறந்த அழகுக்கலை நிபுணருமான கண்ணன் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அழகுக்கலை வல்லுநர்கள் பத்மா வரதராஜ், வெற்றிவேந்தன், அனில் கோத்தாரி, பரத்ராஜ், விஜில் ஆகியோர் கலந்து கொண்டு இந்த உலகசாதனை நிகழ்ச்சியைசிறப்பித்தனர்.

No comments:

Post a Comment