iD - சென்னையின் எவ்ரிடே சோல்ஃபுல், அதன் புதிய கிளையை 19 ஜூன் 2023 அன்று கிண்டியில் உள்ள அப்டவுன் கத்திபாராவில் திறந்ததுள்ளது*
கடந்த 2009 ஆம் ஆண்டு தனது முதல் விற்பனை நிலையத்தைத் திறந்ததிலிருந்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வரும் iD, தனது வாடிக்கையாளர்களுக்கு உதடுகளைத் திறந்து உள்ளத்தைத் தொடும் உண்மையான தென்னிந்திய சைவ உணவு வகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மெனுவில் உள்ள சில உணவு வகைகளாக இட்லி, தோசை, வடை, பூரி, பொங்கல் மற்றும் இடியாப்பம் உள்ளிட்ட தென்னிந்திய உணவுகளைக் குறிப்பிடலாம். கும்பகோணம் டிகிரி காபி, டீ, மோர், ரோஸ் மில்க், ஃப்ரெஷ் ஜூஸ் மற்றும் நன்னாரி சர்பத் போன்ற பானங்களும் அவர்களின் மெனுவில் உள்ளது. இதுமட்டுமல்லாது நாவூறும் இனிப்பு வகைகளும் உள்ளன. வாடிக்கையாளர்களின் ஃபேவரிட்டாக கசி ஹல்வாவை சொல்லலாம்.
iD ரெஸ்டாரட்டின் கான்செப்ட் என்பது சமகால மற்றும் புதுப்பாணியான சூழலில் வழங்கப்படும் உண்மையான தென்னிந்திய உணவைப் பற்றி மக்கள் விரும்பும் அனைத்து நன்மைகளையும் பாரம்பரியத்தையும் தக்கவைத்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெஸ்ட்டாராண்டின் உட்புறங்கள் நேர்த்தியாகவும் மற்றும் இதன் சுவர்கள் கலை சேர்க்கையுடன் மிகவும் நவீனமாகவும் சுவாரஸ்யமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியாகவும் வசதியாகவும் வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் இந்த ரெஸ்ட்டாரண்டில் நமது அனுபவத்தை இன்னும் மகிழ்ச்சியுள்ளதாக மாற்றுகிறது.
கிண்டியில் உள்ள கத்திபாரா அப்டவுன்னில் ஐடியின் (iD) விற்பனை நிலையம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த அவுட்லெட் 24/7 திறந்திருக்கும் முதல் iD பிரான்ச்சாக இருப்பதைத் தவிர்த்து, விரிவான தென்னிந்திய மெனுவில் இப்போது அவர்களின் புதிய முயற்சியாக 'சாட் பை ஐடி' ('Chaat by iD') யையும் சேர்த்துள்ளது. அதாவது வட இந்திய உணவு வகைகளான பேல் பூரி, பானி பூரி போன்ற கிளாசிக் வகைகளை வழங்குவது முதல் சேவ் பப்டி, சாட் டிப் மற்றும் ஹக்கா பெல் போன்ற அற்புதமான மற்றும் தனித்துவமான வட இந்திய ஸ்ட்ரீட் ஃபுட்களை 'சாட் பை ஐடி' மூலமாக வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்துடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புத்தம் புதிய அவுட்லெட் உட்பட, iD தற்போது ஐந்து தனித்தனி இடங்களைக் கொண்டுள்ளது. மீதமுள்ளவை ஹாரிங்டன் ரோடு, நெக்ஸஸ் மால் (வடபழனி), தி மெரினா மால் (ஓஎம்ஆர்) மற்றும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குள் என அவர்களின் முதன்மை உணவகம் கிளை பரப்பியுள்ளது. மேற்கூறியவை தவிர, முக்கியமாக கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் தொடர்ச்சியான விற்பனை நிலையங்கள் DLF ஐடி பார்க் (போரூர்), RMZ (போரூர்), அமேசான் (OMR) மற்றும் Ascendas ஆகிய இடங்களில் உள்ளன.
பிரீமியம் தரம், சுவையான, சுகாதாரமான உணவை வழங்குவது ஆகிய முக்கிய மதிப்புகளுடன், முன்மாதிரியான சேவை மற்றும் சிறந்த உணவு அனுபவத்தை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக திறக்கப்பட்ட கடையில் ஹோஸ்ட் செய்ய iD குழு காத்திருக்கிறது.
*முன்பதிவு செய்ய*: 7305405230 என்ற எண்ணை அழைக்கவும்
Swiggy மற்றும் Zomato ஆகியவற்றிலும் iD உள்ளது.
*எஸ்பிஐ டைனர்ஸ் குறித்து:*
சென்னை உணவகத் தொழிலில் ஒரு கோட்டையை உருவாக்கிய உணவகங்களின் குழுதான் SPI Diners Pt Ltd. பாரம்பரிய தென்னிந்தியாவில் இருந்து வட இந்திய தெரு உணவுகள் மற்றும் உலகளாவிய சமகால உணவுகள் வரையிலான உணவு வகைகள் இங்கு உள்ளது. எங்கள் இலட்சியம் அனைத்தும் ருசியான உணவு, முன்மாதிரியான சேவை மற்றும் சிறந்த உணவு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது.
Insta - https://www.instagram.com/idbyspi/
FB - https://www.facebook.com/IDbySPICinemas/
Twitter - @idbyspi
No comments:
Post a Comment