Featured post

மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்

 *'மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரி...

Wednesday 21 June 2023

நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ்

 *நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ் கான்சர்ட்*  


தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடம் மலேசியாவில் முதன்முறையாக 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் தனது இசை சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார் மலேசியாவில் உள்ள பிரபல முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது. ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ என்கிற பெயரில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு அரங்கில் கூடியிருந்த கூட்டத்திலிருந்து கிடைத்த மாபெரும் வரவேற்பு பிப்ரவரியில் இதன் அடுத்த சீசனை 2.0 என்கிற பெயரில் நடத்துவதற்கு உத்வேகம் அளித்தது 







மிக திறமையான மற்றும் நன்கு பிரபலமான இசைக்கலைஞர்கள் பங்குபெற்ற, டத்தோ அப்துல் மாலிக் அவர்களால் வழங்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி ஒருவிதமான புதிய அனுபவத்தை கொடுத்தது. பாப், ராக், நாட்டுப்புற மற்றும் ஹிப்ஹாப் என வித்தியாசமான ஜானர்களில் அடுத்தடுத்து விதம்விதமான இசைக்கலைஞர்களின் பங்களிப்பில் உற்சாகமும் இளமை துள்ளலுமாக வரிசை கட்டிய இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடல்களுக்கு அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களும் கோரஸாக பாடியதுடன் அவர்களுடன் இணைந்து நடனமும் ஆடினர். 


ஒலி அதிர்வுகளாலும் மற்றும் ஒளி அலங்கராங்களாலும் ஆக்சியாட்டா அரீனா அரங்கமே ஒரு மறக்க முடியாத இசை அனுபவத்திற்கு மாறியது. வருகை தந்த ஒவ்வொரு பார்வையாளருமே மேடையில் நிகழ்வதை நேர்த்தியாக கண்டுகளிக்கும் விதமாக இருக்கை ஏற்பாடுகள் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.. 


‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ் 2.0’வை தொடர்ந்து 3.0 & 4.0 ஆகியவை சமீபத்தில் கடந்த வாரத்தில் மலேசியாவில் நடைபெற்றன.


தங்களது அசத்தலான பாடல்கள் மூலம் பார்வையாளர்களை தங்களது காலடியில் கட்டிப்போட்ட பாடகர்கள் திப்பு, ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் ஆலாப் ராஜூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி துவங்கியது.. 


அடுத்ததாக கார்த்திக், கிரிஷ் மற்றும் விஷ்ணுப்ரியா ஆகியோர் முடிலும் வேறுவிதமான உணர்வை மேடையில் கொண்டுவந்தனர். அவர்களது ஆத்மார்த்த இசையும் வசியம் செய்யும் குரலும் அந்த பாடல்களுக்கு பார்வையாளர்களையும் ஆடவைத்தன. 


விதவிதமான ஜானர்களுடன் கூடிய இசையாலும் நிகழ்ச்சிகளின் வரிசையாலும் இரவு கடந்தும் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை தொடர்ந்து வசீகரித்தது. பலவேறு பிரிவுகளை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது வித்தியாசமான ஸ்டைல்களால் அவற்றை ஒருங்கிணைத்த நேர்த்தியாலும் கூடிய ஒரு ஏற்பாடாக மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது..


இயக்குனர் கவுதம் மேனன், விஜே ரம்யா சுப்ரமணியம், நடிகை அனு இம்மானுவேல் மற்றும் மிருணாளினி ரவி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன் தங்களது பேச்சாலும் செயலாலும் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.


ஹரிசரண், ஸ்ரீதர் சேனா, ஷர்மிளா மற்றும் சைந்தவி ஆகியோரின் மிரளவைக்கும் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. கூடியிருந்த கூட்டத்தை பிரமிக்க வைத்த அவர்களை பாராட்டும் விதமாக அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர் 


மொத்தமாக பார்க்கையில் இந்த இசை நிகழ்ச்சி ஒரு மாபெரும் வெற்றி.  பார்வையாளர்களை போரடிக்க விடாமல் பொழுதுபோக்க செய்யும் வகையிலான சிறந்த பணியை மேற்கொண்ட இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஒவ்வொருவரும் அடுத்த நிகழ்ச்சி எப்போது நடக்க உள்ளது என கேள்வி எழுப்பும் அளவுக்கு அனைவருக்கும் முழு திருப்தி அளித்ததுடன் குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்தது. 


முழுதும் விற்றுத்தீர்ந்த நான்கு சீசன்களால் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ நிகழ்ச்சி உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ 5.0வை பினாங்கிலும் 6.௦0வை  சிங்கப்பூரிலும் 7.0வை மலேசியாவிலும் அடுத்தடுத்து நடத்த உள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

No comments:

Post a Comment