Featured post

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங...

Tuesday, 25 July 2023

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப்

 *நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது!*


கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டம் ‘தியேட்டர்’ மற்றும் ‘ஓடிடி’ என படம் பார்க்கும் பார்வையாளர்களின் பொழுதுபோக்கை வகைப்படுத்தும் போக்கை முற்றிலும் மாற்றியுள்ளது. இந்த இரண்டு வகையிலும் பார்வையாளர்களின் ரசனையை திருப்திப்படுத்துவது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இன்று மிகப்பெரிய சவாலாகிவிட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்து, பாபிநீடு வழங்கிய திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதேபோன்றதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.





இப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை திரையரங்குகளில் நிறைவு செய்து  ரிலீஸைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அதன் ஓடிடி வெளியீட்டின் மூலம் எல்லைகளைத் தாண்டி அபரிமிதமான ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் திரையிடப்பட்ட இந்த ஹாரர் திரில்லர் படம், பல நாடுகளில் முதல் 10 ரேங்கிங்கில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மூன்று மற்றும் நான்காம் இடத்திலும், மலேசியாவில் 7, சிங்கப்பூரில் 10 மற்றும் இலங்கையில் 5 என பல நாடுகளில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா கூறும்போது, “ஒட்டுமொத்த திரையுலகமும் ‘சரியான இடத்தில் சரியான நேரத்தில்’ என்ற விஷயத்தை நம்புகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவைச் சேர்ந்த நாங்கள், எங்களின் வெற்றிப் படமான 'அஸ்வின்ஸ்' மூலம் அது நடந்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறோம். நம் நாட்டிற்கு அப்பால், பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய படமாக உருவாக்கித் தந்த ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்குத் தூண்களாக இருந்த என் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் இதயங்களை வெல்வதில் தவறுவதில்லை. மேலும், ’அஸ்வின்ஸ்’ அனைத்து இடங்களிலும் உள்ள பார்வையாளர்களின் அன்பையும் ஆதரவையும் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற ஒரு அற்புதமான வெற்றி, எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கத்துடன் மேலும் பல படங்களைத் தயாரித்து வழங்க ஊக்குவிக்கிறது” என்றார்.


வசந்த் ரவி, விமல் ராமன், முரளி, சரஸ்வதி மேனன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ள இந்த சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படமான ’அஸ்வின்ஸ்’ஸை தருண் தேஜா எழுதி இயக்கியுள்ளார்.

No comments:

Post a Comment