Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Thursday, 20 July 2023

நேற்று திருமாவளவன் மாவீரன் படத்தை பாராட்டியது மிகப்பெரிய சந்தேகத்தை

 நேற்று திருமாவளவன் மாவீரன் படத்தை பாராட்டியது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது முக்குலத்தோருக்கும் தேவருக்கும் எதிராக இங்கு பெரிய கும்பல் செயல்பட்டு கொண்டிருக்கிறது எங்களுக்கு எதிரான கருத்துகள் எங்களை எதிரியாக பொதுமக்களும் திரிக்கும் வேலைகள் நடக்கிறது மாவீரன் கதைப்படி அமைச்சரான வில்லன் வீட்டில் எங்கள் முக்குலத்து முன்னோடி லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது அதாவது வில்லனின் தந்தையாகவும் வில்லன் அவர் மோதிரத்தை கையில் அணிந்து இருப்பது போலவும் அவரது சிலைக்கு மாலை போடுவது போலவும் வில்லனை முக்குலத்து அமைச்சராக சித்தரித்துள்ளனர்

 கதாநாயகன் சேரியை சார்ந்த மக்களுக்கு போராடுபவர் அதாவது சேரியை சார்ந்த மக்களை ஒரு முக்குலத்து அமைச்சர் ஏமாற்றுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது இது மக்கள் மனதில் தவறான சிந்தனைகளை விதைக்கும் செயல்

 இந்தப் படம் மேலும் திரையரங்கில் திரையிடப்படும் போது எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் படம் நீக்கப்பட வேண்டும் ஓடிடிக்கு சென்றாலும் அந்த காட்சிகளை நீக்கி செல்ல வேண்டும் இதுகுறித்து இயக்குனர் விளக்கம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் இதுபோன்று சமூக குறியீடுகள் அடையாளங்களுடன் படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் 

- திரைப்பட தயாரிப்பாளர் AM சௌத்ரிதேவர்

9047882233

No comments:

Post a Comment