Featured post

இன்டிபென்டென்ட் மியூசிக்கை ஊக்குவிக்கும் யுவன் சங்கர் ராஜா

 *இன்டிபென்டென்ட் மியூசிக்கை ஊக்குவிக்கும் யுவன் சங்கர் ராஜா* *யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும் இன்டிபென்டென்ட் மியூசிக் ...

Sunday 30 July 2023

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக

 ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஒ டி டி யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்...


மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக  கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் , சாம்ஸ் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ஜூபின்  இசை அமைக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார். இவர் ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில்.உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.










யோக்கியன் படம் முதன்.முறை யாக ஒரே நேரத்தில் ஜூலை 28ம் தேதி தியேட்டர் மற்றும்   A  கியூப் மூவிஸ் ஆப் (A qube Movies App )ஒ டி டி தளத்தில்  ரிலீஸ் ஆகிறது. 


யோக்கியன் படம் ஒரே நேரத்தில் தியேட்டர், மற்றும்  ஒ டி டி யில் ரிலீஸ் ஆவது பற்றி  பத்திரிகை, மீடியாக்கள் முன்னிலையில் ஜெய் ஆகாஷ்  கூறியதாவது:


ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும் யோக்கியன் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அதுவும் என்னுடைய ஏ கியூப் மூவிஸ் ஆப்பில் முதன் முறையாக வெளியாகிறது. என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக நான் மட்டுமல்ல பட குழுவினர் அனைவரும்.கடினமாக  உழைத்திருக்கிறார்கள்.. 


எந்தவொரு படமும் மக்களிடம்.கொண்டு சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை. ஆனால் இப்போது  தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய  பேனர் படங்களுக்கு மட்டுமே படம்.பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவ தில்லை.அவர்களை குற்றம்  சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான்  ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். இதுவரை அமேசான், நெட்பிளிக்ஸ் பார்த்து வந்தார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் ஏ.கியூப மூவிஸ் ஆப்பில் அப்படி இல்லை. ஏ கியூப ஆப்பை ஆண்ட்ராய்ட் போனாக இருந்தால் பிளே ஸ்டோரிலும்,  ஆப்பிள் போனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக  டவுன் லோடு செய்துகொள்ளலாம். அதில் படத்தின் டிரெய்லர் வரும் அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி யோக்கியன் படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும். வசதியான நேரத்தில். உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.


A கியூப் ஆப்பிள் 3 லட்சம் பேர் சந்ததாரர்களாக இருக்கிறார்கள்.  இதனால் படத்தின். மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் தற்போதைக்கு ஏ கியூப் ஆப்பிள் வெளியிட எனது 3 படங்கள் ரெடியாக உள்ளது.படம் எடுத்துவிட்டு  தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ஏ கியூப் ஆப்பில்  வெளியிடலாம். அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப் படும் அத்துடன் 80 சதவீதம் வருமான அளிக்கப்படும் 20 சதவீதம் மட்டுமே ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும்.


சினிமாவில் நான் நடித்து பெற்ற பெயரைவிட  ஜீ தமிழ் டிவியில் நீ தானே என் பொன் வசந்தம் என்ற டி வி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிட்டேன். அதனால் அவ்வளவு ரசிகர்களும் என் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.


ஜூலை 28ம் தேதி தியேட்டரிலும் யோக்கியன் ரிலீஸ் ஆகிறது. குறைந்தளவு தியேட்டர்ல்தான் படம் வெளியாகிறது தியேட்டரில் படத்தை பார்க்க  முடியா விட்டால் ஏ கியூப் மூவிஸ் ஆப்பிள் யோக்கியன் படத்தை பார்த்து ரசியுங்கள்  


கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை இப்படம் மையமாக கொண்டு இக்கதை உருவாகி யுள்ளது.  அத்துடன் நல்ல பாடல், இசை, காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்களுடன் படம் வந்திருக் கிறது. நல்லவன் கெட்டவன் ரோல்களில்  ஹீரோக்கள் நடிக்கின்றனர்.  அப்படியொரு முயற்சியாகவே நான் இதில் நடித்திருக்கிறேன். ஹீரோவாக மட்டுமல்லாமல்  வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இதில் காணலாம். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.


இவ்வாறு ஜெய் ஆகாஷ் கூறினார்.


இயக்குனர் சாய் பிரபா மீனா பேசும்போது, யோக்கியன் கதையை ஜெய் ஆகாஷ்  எழுதி உள்ளார். திரைக்கதை அமைத்து நான்  இயக்கி உள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் ஏ கியூப் ஆப்பில் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்" என்றார்.

No comments:

Post a Comment