Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Friday, 21 July 2023

விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'!

 விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'!


இரட்டை இயக்குநர்களில் கிருஷ்ணன்- பஞ்சு தமிழ்த் திரை உலகில் பிரபலமானவர்கள்.அதன் பிறகு பாரதி -வாசு, ராபர்ட்- ராஜசேகர், மலையாள சித்திக்- லால் போன்ற இரட்டையர்கள் பிரபலமானவர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில்  இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.அவர்கள் தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.சினிமாவின் மீது காதல் கொண்ட இந்த இருவரும் இணைந்து 'லாக்கர்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள்.

இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.







இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும்  நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார்.

 கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.


வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில்  நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.


அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ்  இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.


படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.


படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.


முழுக்க முழுக்க சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  கிழக்கு கடற்கரைச் சாலை, அம்பத்தூர், குரோம்பேட்டை போன்ற இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணியில் இருக்கும் லாக்கர் ஒரு ராபரி டிராமாவாக உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment