Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Thursday 20 July 2023

துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது

 *'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் 'மை நேம் இஸ் ஜான்' பெப்பி பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்!*


கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்ற பிறகு, படக்குழு அவர்களின் இரண்டாவது சிங்கிளான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' உடன் மீண்டும் வந்துள்ளது. இந்தப் பாடல் ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்டது.






இந்த பெப்பியான பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர். திறமை மற்றும் துடிப்பான இண்டி ராப்பரும் பாடலாசிரியருமான பால் டப்பா இந்த வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதற்கு முன்பு வெளியாகி ஹிட் ஆன பாடலான 'ஐ ஐ ஐ'லையும் அவர்தான் எழுதி உள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. மேலும், இந்தப் பாடலை மியூசிக் லேபிளுடன் இணைந்து தங்கள் இரண்டாவது சிங்கிளாக வெளியிடுவதில் படக்குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ஒரு ஊரிலொரு ஃபிலிம் ஹவுஸுடன் இணைந்து ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் படத்தை தயாரித்துள்ளது.  கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். 


*நடிகர்கள்*: விக்ரம், ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஆர் ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, மாயா எஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்குநர்: கௌதம் வாசுதேவ் மேனன்,

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்,

ஒளிப்பதிவாளர்கள்: மனோஜ் பரமஹம்சா, எஸ்ஆர் கதிர் ISC, விஷ்ணு தேவ்,

படத்தொகுப்பு: அந்தோணி,

கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,

ஸ்டைலிங் மற்றும் உடைகள்: உத்ரா மேனன்

No comments:

Post a Comment