Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Thursday, 27 July 2023

தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ்

தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  #D51 அறிவிப்பு


பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இந்தப்படத்திற்காக இணைய உள்ளார்.   




தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படம், நாராயண் தாஸ் கே நாரங்கின் ஆசிகளுடன், சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. சோனாலி நாரங் இந்த படத்தை வழங்குகிறார். 


#D51 தயாரிப்பாளர்கள் இந்தப்படத்திற்கான கான்செப்ட் போஸ்டர் ஒன்றை தனுஷின் பிறந்தநாளன்று (ஜூலை-28) வெளியிட்டுள்ளனர். இதுவரை முன்னெப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப்படத்திற்காக மிகப்பொருத்தமான கதையை தயார் செய்துள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா. மேலும் இந்தப்படத்தில் பங்குபெற உள்ள இன்னும் சில மிகப்பெரிய பிரபலங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.


நடிப்பு ; தனுஷ் 


இயக்குனர் ; சேகர் கம்முலா 


வழங்குபவர் ; சோனாலி நாரங் 


தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  


தயாரிப்பாளர்கள் ; சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ்

No comments:

Post a Comment