Featured post

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும்

 *உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!* ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷ...

Friday, 28 July 2023

சுயாதீன இசைக் கலைஞர் (Independent Musician) ஸ்ரீகாந்த் கேவிபி'யின் 4-வது பாடல்

 சுயாதீன இசைக் கலைஞர் (Independent Musician) ஸ்ரீகாந்த் கேவிபி'யின் 4-வது பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் உற்சாகமான வரவேற்பை குவித்து வருகிறது.


பாடல் பற்றி ஸ்ரீகாந்த் கேவிபி'யிடம் கேட்டபோது, ‘‘இது என்னுடைய நான்காவது சிங்கிள். இந்த பாடல் இளைஞன் ஒருவனின் கடந்த கால காதல் நினைவுகளை அசைபோடுவது போலிருக்கும். பாடலின் இசை மனதை வருடும் விதத்திலும், பாடலின் காட்சிகள் ஒருவித கனவுலகுக்குள் இழுத்துச் செல்வது போன்ற உணர்வைத் தரும்படியும் உருவாக்கியுள்ளோம்.



பாடலுக்கான விஷுவல்ஸ் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்து உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடல் ஒவ்வொருவரையும் அவர்களின் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க வைக்கும். காரணம், எல்லோருமே அப்படியான ஒரு அனுபவத்தை கடந்துதான் வந்திருப்பார்கள். அதனால், எல்லோரையும் ஏதோவொரு விதத்தில் இந்த பாடல் இணைக்கும். 


சினிமாவுக்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது கனவு. அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment