Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Wednesday, 5 July 2023

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் 'ஜீனி' படத்தின் தொடக்க விழா

 *ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் 'ஜீனி' படத்தின் தொடக்க விழா*


*பூஜையுடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் 25ஆவது படம் 'ஜீனி'*



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, 'ஜீனி' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படக் குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.


இயக்குநர் அர்ஜுனன் ஜெஆர். இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஜீனி'. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜெ. குமார் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ்  மேற்கொள்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை சர்வதேச சண்டை பயிற்சி கலைஞரான யானிக் பென் அமைக்க, ஸ்வப்னா ரெட்டி ஆடை வடிவமைப்பாளராக  பணியாற்றுகிறார். இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக கே. அஸ்வின் குமாரும், கிரியேட்டிவ் புரொடியூசராக கே. ஆர். பிரபுவும் பணியாற்றுகிறார்கள். 


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் 'ஜீனி', வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25 வது படம் என்பதால்..., மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராவதுடன், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

No comments:

Post a Comment